in ,

300 ஆண்டுகால பழமை வாய்ந்த கோயிலில் தேர் திருவிழா


Watch – YouTube Click

300 ஆண்டுகால பழமை வாய்ந்த வரலாற்று சிறப்புமிக்க கோயிலில் கூத்தாண்டவர் மற்றும் செல்லியம்மன் தேர் திருவிழா

பக்தர்கள் பக்தி பரவசத்தில் சாமி வந்து ஆடினர்

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த பெலாசூர் கிராமத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ செல்லியம்மன் மற்றும் கூத்தாண்டவர் கோயில் தேர் திருவிழா விமர்சையாக நடைபெற்றது.

போளூர் அடுத்த பெலாசூர் கிராமத்தில் வரலாற்று சிறப்புமிக்க பழமை வாய்ந்த ஸ்ரீ செல்லியம்மன் மற்றும் கூத்தாண்டவர் கோயிலில் நான்கு தலைமுறைகளுக்கு மேல் நடத்தப்படும் சுமார் 300 ஆண்டு காலம் பழமை வாய்ந்த தேர் திருவிழா நடைபெற்றது.

ஆண்டுதோறும் தை அமாவாசை நாளில் நடைபெறும் ஸ்ரீ செல்லியம்மன் மற்றும் கூத்தாண்டவர் தேர் திருவிழாவில் உலக நன்மைக்காகவும், கிராமத்தில் மழை வளம் பெருகி விவசாயம் செழிக்க வேண்டும் எனவும் ஊருக்குள் கொடிய நோய் பரவாமல் தவிர்க்கவும் பல தலைமுறைகளாக பாரம்பரிய முறைப்படி நடைபெற்று வரும் இத்தேர் திருவிழா இவ்வாண்டும் வெகு விமர்சையாக நடைபெற்றது.

இத்தேர் திருவிழாவை காண்பதற்காக சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், திண்டிவனம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்தும் கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்தனர்.

குறிப்பு : பெலாசூர் கிராமத்தில் முக்கிய வீதிகளின் வழியாக சாமி தேர் ஊர்வலம் வரும் பொழுது பெண்கள் சாமி வந்து ஆடியது பார்ப்போரை பக்தி பரவசத்தில் ஆழ்த்தியது குறிப்பிடத்தக்கது


Watch – YouTube Click

What do you think?

காவலர்களுக்கு தலைக் கவசம் அணிவித்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

முன்னாள் மத்திய அமைச்சர் ஆ ராசா எம்பி உருவ படம் எரிப்பு