in

தேர்தலை புறக்கணித்து வீட்டுக்கு வீடு கருப்பு கொடி ஏற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது


Watch – YouTube Click

திருச்சி மாநகராட்சி அரியமங்கலம் பகுதியில் மக்கள் தேர்தல் புறக்கணிப்பு

திருவெறும்பூர் அருகே உள்ள திருச்சி மாநகராட்சி அரியமங்கலம் பிரான்மலைநகர் பகுதியில் சாலை வசதி செய்து கொடுக்காததை கண்டித்து தேர்தலை புறக்கணித்து அப்பகுதி மக்கள் வீட்டுக்கு வீடு கருப்பு கொடி ஏற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி மாநகராட்சி அரியமங்கலம் பிரான்மலை நகர் பகுதியில் சுமார் 50 குடும்பத்தினர் வசித்து இவர்களுக்கு அடிப்படை வசதியான சாலை வசதி சரியில்லை என்று கூறப்படுகிறது. இதனை சரி செய்து தரக்கோரி அப்பகுதி பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் மாநகர கவுன்சிலரிடம் பலமுறை கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது.

ஆனால் மாநகர கவுன்சிலர்கள் இது தங்களுக்கு உரிய பகுதி இல்லை என கூறி தங்கள் பகுதியை புறக்கணித்து வருவதாக சொல்லப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் ஆத்திரம் அடைந்து இன்று காலை தங்களது வீடுகளில் கருப்பு கொடி ஏற்றியதோடு தங்களது வாக்காளர் அடையாள அட்டைகளை அட்டை பெட்டியில் போட்டு தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் இப்பகுதியில் உள்ள 120 வாக்குகள் வாக்களிக்காமல் பாதிக்கும் நிலை உள்ளது.


Watch – YouTube Click

What do you think?

பாளையங்கோட்டை 61 வது பூத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் ப்ரூஸ் ஆய்வு

ஜனநாயக கடமையை ஆற்ற வந்த 101 வயது விடுதலைப் போராட்ட தியாகி மனைவி காமாட்சி