in

ஒரு நாள் விடியும் என்று நினைத்தவருக்கு …இன்று விடியாமலே போனது…

ஒரு நாள் விடியும் என்று நினைத்தவருக்கு… இன்று விடியாமலே போனது… உதவி இயக்குனர் திருமாறன் மரணம்

சினிமாவில் நுழையும் அனைவராலும் வெற்றி கனிகளை சுவைக்க முடியாது என்றாலும் தனக்கான இடத்தை தக்க வைத்துக் கொள்ள போராடி தான் ஆக வேண்டும்.

சிலர் ஜெயிக்கிறார்கள் சிலர் தோற்று விடுகிறார்கள் அப்படி ஒருவர் தான் 30 வருடங்களாக சினிமா துறையில் தனது திறமையை நிரூபிக்க வாய்ப்பு கதவு திறக்குமா என்ற ஏக்கத்திலேயே உயிர் துறந்தவர் உதவி இயக்குனரும் பாடல் ஆசிரியரும்ஆன திருமாறன் மரணம் அடைந்தார்.

1994 ஆம் ஆண்டு வி சேகர் இயக்கிய ‘காலம் மாறி போயாச்சு’ என்ற படத்தின் மூலம் உதவி இயக்குனராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து ‘கோல்மால்’ படத்தின் மூலம் பாடல் ஆசிரியராக அறிமுகம் ஆனார். பிறகும் பாடல் எழுத வாய்ப்பு கிடைக்காததால் மீண்டும் உதவி இயக்குனராக பணியாற்றினார்.

மகளிர்காக படத்தில் அசோசியேட் டைரக்டராக பணியாற்றிய போது அந்தோணி தாசனை சினிமாவில் நடிகராக அறிமுகப்படுத்தியவர், திறமை இருந்தும் விடாமுயற்சியுடன் போராடியவருக்கு வாய்ப்புகள் தான் கிடைக்கவில்லை.

25 வருடங்கள் கழித்து அந்தோணி தாசன் இசையில் திருமாறன் எழுதிய சுதந்திர தேசமே வந்தே மாதரம் என்ற பாடலை சித்ரா அவர்களும் சங்கர் மகாதேவன், ஜி வி பிரகாஷ், இளையராஜா குட்டி பாப்பா ஆகியோர் பாடினார் விரைவில் ஒரு படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க இருந்த இவர் உடல்நலம் சரியில்லாததால் மரணம் அடைந்தார்.

திருமாறனுக்கு, இவருக்கு ஒரு மகள் உண்டு இவரின் இறுதிச் சடங்கு நாளை அம்பத்தூரில் நடைபெற உள்ளது. ‘யாருடனும் உன்னை ஒப்பிடாதே அவன்பாதை வேறு..உன் பாதை வேறு இருவர் பிறப்பின் நோக்கமும் வேறு உங்களுக்கான தடையத்தை இந்த மண்ணில் பதித்துவிட்டீர்கள்.. அமைதியுடன் உறங்குகள் திருமாறன் சார்..

What do you think?

லால் சலாம்.. ரசிகர்களை சலாம் போடவைத்ததா… பொறுத்திருந்து பார்போம்

தமிழ்நாட்டு மருமகளாக,,, ஆக போகும் Samantha