in

பிரிட்டன் தமிழ் செய்திகள்


Watch – YouTube Click

பிரிட்டன் தமிழ் செய்திகள்

ஐரோப்பிய செய்திகள்

அறியாமையில் இருந்து ஐரோப்பியா வெளியேற வேண்டும் என பிரான்ஸ் அதிபர் வேண்டுகோள்

பிரான்சின் சான்போன் பல்கலைக்கழகத்தில் ஐரோப்பிய யூனியன் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அறியாமை என்ற இருளில் இருந்து ஐரோப்பிய நாடுகள் வெளியேற வேண்டும். மாறிவரும் சூழலுக்கு ஏற்ப ஐரோப்பிய நாடுகள் தங்களை தகவமைத்துக் கொள்ள வேண்டும்.

இல்லையென்றால் ஐரோப்பிய நாடுகளுக்கு பேராபத்து ஏற்படும் என்று அவர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

ஸ்பெயின் பிரதமர் மனைவிக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய வழக்கறிஞர்கள் வேண்டுகோள்

ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சாஞ்செஸ் மனைவி மீது ஊழல் குற்றச்சாட்டை தனியார் அமைப்பு ஒன்று முன் வைத்தது. இது தொடர்பான வழக்கின் விசாரணை
மாட்ரிட் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இதனால் பிரதமரின் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டது. எனவே அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் பிரதமரின் மனைவி மீது சுமத்தபட்ட குற்றச்சாட்டு போலியானது; அவரை இந்த வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும் என அரசு தரப்பு வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் வாதாடினர்.

இந்த வழக்கில் விரைவில் நீதிபதி தீர்ப்பு அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரஷ்யாவுக்கு எதிராக நீண்ட தூரம் தாக்கக்கூடிய பாலிஸ்டிக் ஏவுகணைகளை முதன்முறையாக பயன்படுத்திய உக்ரைன்

உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் இரண்டு ஆண்டுகளையும் தாண்டி நடைபெற்று வருகிறது. உக்ரேன் நாட்டுக்கு அமெரிக்கா நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆயுதங்கள் விநியோகித்து வருகிறது.

இந்த நிலையில் அமெரிக்காவால் அளிக்கப்பட்ட பாலிஸ்டிக் ரக ஏவுகணையை உக்கிரையில் முதல் முறையாக பயன்படுத்தி ரஷ்யா மீது தாக்குதல் நடத்தி இருக்கிறது.

நீண்ட தூர இலக்கை எளிதில் தாக்கக்கூடிய இந்த பாலிஸ்டிக் கிரக ஏவுகணையானது, அமெரிக்காவால் உக்ரேனுக்கு ரகசியமாக வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் விண்வெளி மசோதாவுக்கு ரஷ்யா எதிர்ப்பு

விண்வெளியின் வெளிப்புற ஆய்வில் உலக நாடுகள் போட்டி போட்டுக்கொண்டு ஆய்வு நடத்தி வருகின்றன. அதிலும் வல்லரசு நாடுகளுக்கு இடையே இந்த போட்டி அதிக அளவில் காணப்படுகிறது.

இந்த நிலையில் இந்தப் போட்டியை குறைத்து விண்வெளியில் புறவெளியில் அனைத்து நாடுகளும் ஒத்துழைப்பை கடைபிடிக்க வலியுறுத்தி அமெரிக்கா சார்பாக ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

இந்தத் தீர்மானத்துக்கு ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்தன. ஆனால் ரஷ்யா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதனால் அந்தத் தீர்மானம் பாதுகாப்பு கவுன்சிலில் நிறைவேறுவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

விண்வெளியில் இருந்து தாக்கக்கூடிய செயற்கைக்கோளை ரஷ்யா ஆய்வு அடிப்படையில் செயல்படுத்தி வருவதாலேயே இது போன்ற தில்லாலங்கடி வேலைகளை செய்வதாக ரஷ்யா மீது அமெரிக்கா குற்றம் சாட்டி இருக்கிறது.

பிரிட்டனில் தோல் புற்று நோய்க்கு எதிராக தடுப்பூசி சோதனை முறையில் செலுத்தப்பட்டது

பிரிட்டனில் தோல் புற்று நோயால் ஒரு சிலர் பாதிக்கப்படுகின்றனர். முதன்முறையாக தோல் புற்றுநோயை தடுக்க பிரிட்டனில் தடுப்பூசி கண்டறியப்பட்டு இருக்கிறது.

இந்த தடுப்பூசியானது ஸ்டீவ்னேஜ் பகுதியைச் சேர்ந்த ஸ்டீவ் யங் என்ற 52 வயது மதிக்கத்தக்க நபருக்கு முதன்முறையாக செலுத்தப்பட்டது.

அவர் ஏற்கனவே கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் தோல் புற்று நோயால் பாதிக்கப்பட்டு வந்தார். இதனால் பரிச்சாத்த முறையில் அவருக்கு முதன்முறையாக தடுப்பூசி செலுத்தப்பட்டு இருக்கிறது.

இங்கிலாந்தில் அடுத்த வாரம் உள்ளாட்சித் தேர்தல்

இங்கிலாந்தில் உள்ளாட்சி, மேயர், போலீஸ், கிரைம் கமிஷனர் ஆகிய பணியிடங்களுக்கு அடுத்த வாரத்தில் தேர்தல் நடைபெற உள்ளது.

ருவாண்டா அகதிகள் மசோதா விவகாரத்தில் பிரதமர் ரிஷி சுனக் சிக்கலில் மாட்டிக் கொண்டு விட்டதால் இந்தத் தேர்தல் முடிவுகள் ஆளும் கட்சிக்கு சாதகமாக இருக்குமா என்ற கேள்வி கூறி ஏற்பட்டு இருக்கிறது.

மேலும் இந்தத் தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்று விட வேண்டும் என்ற முனைப்பில் எதிர்க்கட்சியான லேபர் கட்சி செயல்பட்டு வருகிறது.

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பிரிட்டன் பொது தேர்தலுக்கு அஸ்திவாரமாக இந்த உள்ளாட்சி தேர்தல் கருதப்படுகிறது.

நீதிபதி மீது செக்ஸ் குற்றசாட்டை முன்வைத்த பெண்கள்

இங்கிலாந்தின் லீட்ஸ் நகரைச் சேர்ந்த பிலீப் லாங்காஸ்டர் நகரின் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வருகிறார். இதே நீதிமன்றத்தில் பணியாற்றிய 5 பெண்கள் அவர் மீது செக்ஸ் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர்.

வேலை நேரத்தில் தங்களிடம் நீதிபதி பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும், அதற்கு ஒத்துழைக்கவில்லை என்றால் சத்தம் போட்டு திட்டியதாகவும் அந்த பெண்கள் பிபிசிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்கள்.

ஆனால் இந்தக் குற்றச்சாட்டுக்கு நீதிபதி தரப்பில் இதுவரை எந்த ஒரு விளக்கமும் அல்லது மறுப்போ தெரிவிக்கப்படவில்லை.

 

 

Watch – YouTube Click

What do you think?

சொந்த கிராமத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி

கூண்டில் சிக்காத சிறுத்தை, கேமராக்களை ஆய்வு செய்யும் வனத்துறையினர், தொடரும் சிறுத்தை