in

பாளையங்கோட்டை தலைமை அஞ்சலகம் முன்பு 100 சதவீதம் வாக்குப்பதிவு வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம்


Watch – YouTube Click

பாளையங்கோட்டை தலைமை அஞ்சலகம் முன்பு 100 சதவீதம் வாக்குப்பதிவு வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம்

பாளையங்கோட்டை தலைமை அஞ்சலகம் முன்பு 100 சதவீதம் வாக்குப்பதிவு வலியுறுத்தி தேர்தல் விழிப்புணர்வு ஊர்வலம் இன்று நடைபெற்றது முதல் நிலை அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் செந்தில்குமார் தலைமையில் நடந்த இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தில் பாளையங்கோட்டை தொகுதி உதவி தேர்தல் ஆணையர் மாநகராட்சி கமிஷனர் தாக்கரே சுபம் ஞானதேவராவ் கொடியசைத்து தொடங்கி வைத்தார் இந்த தேர்தல் விழிப்புணர்வு ஊர்வலம் பாளை தலைமை அஞ்சலகத்தில் தொடங்கி பெருமாள் கீழரத வீதி வடக்கு ரத வீதி மேல ரத வீதி மற்றும் தெற்கு பஜார் வழியாக நடைபெற்றது

இந்திய அஞ்சல் துறை மற்றும் இந்திய தேர்தல் ஆணையத்துடன் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி முறையான வாக்காளர் கல்வி மற்றும் தேர்தலில் அனைவரும் பங்கேற்பும் விதமான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு வாக்காளரும் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கவும் மேலும் வாக்களிப்பது ஒவ்வொரு இந்திய குடிமகனின் கடமை மற்றும் உரிமை என்பதை விளக்கும் வகையிலும் இந்த விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்பட்டது

விழிப்புணர்வு ஊர்வலத்தில் உதவி கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் பாலாஜி, குமரன், சண்முகப்பிரியா தலைமை அஞ்சலக அதிகாரிகள் ராமச்சந்திரன் விக்டோரியா மற்றும் 200க்கும் மேற்பட்ட அஞ்சல் ஊழியர்கள் கலந்து கொண்டனர் தேர்தல் விழிப்புணர்வுக்கான ஏற்பாடுகளை அஞ்சலக மக்கள் தொடர்பு அதிகாரி கனக சபாபதி செய்திருந்தார். ஊர்வலத்தில் பங்கேற்ற மாணவ மாணவிகள் சிலம்பாட்டம் , சுருள் கத்தி வீசுதல் மற்றும் டிரம்ஸ் இசைத்து விழிப்புணர்வு ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.


Watch – YouTube Click

What do you think?

பாஜக வேட்பாளர் செந்தில்நாதன் வாக்குறுதி

பிரதமர் மோடி மீது காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது