in

தொழிலாளியை பாராட்ட விமானத்தில் பறந்து வந்த சிங்கப்பூர் முதலாளி


Watch – YouTube Click

தொழிலாளியை பாராட்ட விமானத்தில் பறந்து வந்த சிங்கப்பூர் முதலாளி

 

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆயக்காரன்புலம் கிராமத்தைச் சேர்ந்த சண்முகராஜன் இவர் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு சிங்கப்பூருக்கு வேலைக்காக சென்று அங்கு ஒரு மர பர்னிச்சர் கம்பெனியில் வேலைக்காக சேர்ந்தார். அங்கு 14 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றி அந்த கம்பெனிக்கு நல்ல வருவாயை ஈட்டி கொடுத்து, அங்கு அனைத்து வேலைகளையும் கற்றுக் கொண்டார்.

பிறகு 14 ஆண்டுகள் வேலை முடித்த பிறகு சொந்த ஊர் வந்து சொந்த கிராமத்தில் ஒரு மரபர்னிச்சர் ஷோரூம் திறந்து சிறப்பாக தொழிலை செய்து வருகிறார்.

இந்த தகவல் சிங்கப்பூர் வேலை பார்த்த கம்பெனி முதலாளிக்கு தெரிய வந்தது. இதை அடுத்து அந்த கம்பெனி முதலாளி சண்முகராஜனை தொடர்பு கொண்டு உங்கள் மர பர்னிச்சர் ஷோரூம் பார்க்க நான் இந்தியா வருகிறேன்
என அவர் கூறியுள்ளார்.

உடனடியாக இந்தியா வர அனைத்து ஏற்பாடும் செய்து மர பர்னிச்சர் ஷோரூம் பார்வையிடுவதற்காக சிங்கப்பூரிலிருந்து கோலிஞ்சி ஹங்மிங், டிம் ஆகிய மூன்று பேர் வருகை தந்தனர்.

மூன்று பேரும் வருகை தந்த உடன் அங்கு குதிரை சாரட்டு வண்டியில் மூன்று பேரும் ஊர்வலமாக சுமார் மூன்று கிலோமிட்டர் தூரம் மேல தாளங்கள் முழங்க, வான வேடிக்கையுடன் ஊர்வலமாக பர்னிச்சர் ஷோரூமுக்கு அழைத்து சென்றனர்.

அங்கு அருள்வாக்கு சித்தர் கலிதீர்த்தான் தலைமையில்பெண்கள் ஆரத்தி எடுத்து, பூரண கும்ப மரியாதை அளித்து பூ தூவி வரவேற்றனர்.

அங்கு இந்த மூவருக்கும் மாலைகள் அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்பு மர பர்னிச்சர் பர்னிச்சர் ஷோரூமை பார்வையிட்டு மகிழ்ச்சி அடைந்தனர்.

பின்னர் மேடையில் சிங்கப்பூர் முதலாளி உரையாற்றினார். அப்போதே என்னிடம் வேலை பார்த்த ஒரு தொழிலாளி இன்று இந்தியாவில் 12 ஆண்டுகளாக மர பர்னிச்சர் ஷோரூம் சிறப்பாக நடத்தி தொழிலதிபராக மாறி இருப்பதை கண்டு மகிழ்ச்சி அடைகிறேன் என உரையாற்றினார்.

சிங்கப்பூரிலிருந்து முதலாளி ஒருவர் தொழிலாளியின் கடைக்கு வந்து பார்வையிட்டதை அப்பகுதி பொதுமக்கள் வியப்புடன் பார்த்து சென்றனர்.


Watch – YouTube Click

What do you think?

அரசு வழங்கிய மரக்கன்றுகள் அதிகாரிகளின் அலட்சியத்தால் காய்ந்து குப்பையாகி கிடைக்கிறது

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை ஊழியர்கள் சங்கம் சார்பாக மாவட்ட ஆட்சியருக்கு எதிராக கண்டன ஆர்பாட்டம்