in

பள்ளி மாணவ, மாணவிகள் நடத்திய அறிவியல் செயல்திட்ட மாதிரி கண்காட்சி


Watch – YouTube Click

பள்ளி மாணவ, மாணவிகள் நடத்திய அறிவியல் செயல்திட்ட மாதிரி கண்காட்சி

 

தென்காசி நகராட்சி நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் நடத்திய அறிவியல் செயல்திட்ட மாதிரி கண்காட்சி – பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்திய படைப்புகள் – இளம் விஞ்ஞானிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு.

தென்காசி நகராட்சி 7வது வார்டு பகுதியான சுவாமி சன்னதி தெருவில் நகராட்சி நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையில் சுமார் 300 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

இந்தப் பள்ளியில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு அறிவியல் செயல் திட்ட கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியை தென்காசி வட்டார கல்வி அலுவலர் இளமுருகன் தலைமையேற்று தொடங்கி வைத்தார்.

கண்காட்சியில் மாணவ மாணவிகள் தங்களது அறிவியல், கணிதம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, எரிசக்தி தொடர்பான படைப்புகளை காட்சிப்படுத்தியிருந்தனர். கண்காட்சியை சிறப்பு அழைப்பாளர்கள் பார்வையிட்டு மாணவ மாணவிகளை வெகுவாக பாராட்டினர்.

கண்காட்சியை பெற்றோர்கள் சமூக ஆர்வலர்கள் அருகிலுள்ள பள்ளி மாணவ மாணவியர் மற்றும் முன்னாள் மாணவர் சங்க உறுப்பினர்கள் பள்ளி கல்வி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பள்ளி மேலாண்மை குழு துணைக் குழு உறுப்பினர்கள் பார்வையிட்டு மாணவ மாணவியர்களை பாராட்டினர்.

அனைவரையும் பள்ளி தலைமை ஆசிரியர் கற்பகம் மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார். கண்காட்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள், சிறப்பாக செய்திருந்தனர்.


Watch – YouTube Click

What do you think?

பாகிஸ்தானுக்கு சீனா கடன் உதவி

புதுச்சேரியில் 10 பேர் கொண்ட விபசார கும்பல் அதிரடி கைது