in

23 நாய் இனங்களுக்கு தடை மத்திய அரசு அதிரடி உத்தரவு


Watch – YouTube Click

23 நாய் இனங்களுக்கு தடை மத்திய அரசு அதிரடி உத்தரவு

இந்தியாவில் சமீபகாலமாக நாய்களால் தொல்லைகள் அதிகரித்து வருகிறது. தெருவில் நடந்து போகும் சிறு குழந்தைகள், பெண்கள், முதியவர்களை கடித்து விடுகிறது.

வெறித்தனமாக இவை சுற்றித் திரியும் கடித்து விடுவதால் சில நேரங்களில் உயிரிழப்புக்களும் அதிகரித்து விடுகின்றன. இதனைக் கருத்தில் கொண்டு, இந்தியாவில் ஆபத்தானதாகக் கருதப்படும் சில நாய் இனங்களின் இறக்குமதி, விற்பனை மற்றும் இனப்பெருக்கத்திற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. அத்தகைய நாய் இனங்களை தடை செய்யுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.

இதுகுறித்து மத்திய கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அனைத்து மாநிலங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில் ” குறிப்பிட்ட தடைசெய்யப்பட்ட நாய்களில் இறக்குமதி, விற்பனை மற்றும் இனப்பெருக்கத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது.

இந்த தடை செய்யப்பட்ட நாய்களை ஏற்கனவே வைத்திருப்பவர்கள் அவைகளுக்கு கருத்தடை செய்ய வேண்டும் ” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட ஆபத்தான நாய் இனங்களின் பட்டியல்

1. பிட்புல் டெரியர்
2. தோசா இனு
3. அமெரிக்கன் ஸ்டாஃபோர்ட்ஷையர் டெரியர்
4. ஃபிலா பிரேசிலிரோ
5. டோகோ அர்ஜென்டினோ
6. அமெரிக்கன் புல்டாக்
7. போஸ்போல்
8. கங்கல்
9. மத்திய ஆசிய ஷெப்பர்ட் நாய்
10. காகசியன் ஷெப்பர்ட் நாய்
11. தென் ரஷ்ய ஷெப்பர்ட் நாய்
12. டோர்ன்ஜாக், சர்ப்லானினாக்
13. ஜப்பானிய தோசா மற்றும் அகிதா
14. மாஸ்டிஃப்ஸ்
15. ராட்வெய்லர்
16. டெரியர்கள்
17. ரோடீசியன் ரிட்ஜ்பேக்
18. உல்ஃப் நாய்கள்
19. கனாரியோ
20. அக்பாஷ்
21. மாஸ்கோ காவலர்
22. கேன் கோர்சோ
23. பந்தோக்

ஆகிய வெளிநாட்டு நாய் இனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

டெல்லி உயர் நீதிமன்றம் நாய்களை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது.

இதற்கு பதிலளிக்கும் வகையில் நிபுணர்கள் மற்றும் விலங்குகள் நல ஆர்வலர்கள் அடங்கிய குழு, தங்களது அறிக்கையை சமர்ப்பித்ததை அடுத்து மத்திய அரசு இந்த உத்தரவை பிறப்பித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.


Watch – YouTube Click

What do you think?

புதிய அமைச்சரை சட்டப்பேரவை அலுவலக அறையில், ரங்கசாமி அமர வைத்தார்

தமிழ்நாடு போலிஸ் அகாடமியின் கூடுதல் இயக்குநராக தேன்மொழி ஐ பி எஸ்