in

புதுச்சேரி மாநில அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் மறியல் போராட்டம்


Watch – YouTube Click

புதுச்சேரி மாநில அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் மறியல் போராட்டம்

 

புதுச்சேரி மாநில  அனைத்து தொழிற்சங்கங்கள் விவசாய சங்கங்கள் சார்பில் மத்திய அரசை கண்டித்து பாஸ்போர்ட் அலுவலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

மத்திய அரசை கண்டித்து  பிப்ரவரி 16 ஆம் தேதி புதுச்சேரி மாநிலத்தில் வேலை நிறுத்த போராட்டம் கிராமப்புறங்களில் பந்த், பேரணி, மறியல் போராட்டம் நடைபெறும் என்று தொழிற்சங்கங்கள் அறிவித்திருந்தன.

இந்நிலையில்  அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில், வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு, சுப்பையா சிலை அருகில் இருந்து பேரணையாக புறப்பட்டு மறைமலை அடிகள் சாலையில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது.

மேலும் கிராமப்புற பகுதிகளான பாகூர், மதகடிப்பட்டு பகுதிகளில் விவசாய சங்கம், விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் மறியல் போராட்டங்கள் நடைபெற்றது.

இதில் முக்கிய கோரிக்கைகளான வேளாண் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை(50%) உத்தரவாதப்படுத்த வேண்டும் தொழிலாளர்களுக்கு மாதம் ரூபாய் 26,000/– குறையாத குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும்

புதுச்சேரி அமைப்புசாரா தொழிலாளர் நலவாரித்தை நிதி ஒதுக்கி செயல்படுத்த வேண்டும் மக்களை பாதிக்கும் ஃப்ரீ பெய்டு மின் மீட்டர் திட்டத்தை கைவிடு
ரேஷன் கடைகளை திறந்து அனைத்து அத்தியாவசிய பொருட்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறைமலை அடிகள் சாலையில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த மறியல் போராட்டத்தின் காரணமாக அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர்.


Watch – YouTube Click

What do you think?

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் த வேணுகோபால் உடல் நலக்குறைவால் காலமானார்

கண்டக்கோட்டை பகுதியில் கல்குவாரி அமைக்க R D O தலைமையில் கருத்துக்கேட்பு கூட்டம்