in

அகில இந்திய அளவில் போதை பொருள் விற்பனை செய்யும் மாநிலமாக புதுச்சேரி மாறியுள்ளது

 

அகில இந்திய அளவில் போதை பொருள் விற்பனை செய்யும் மாநிலமாக புதுச்சேரி மாறியுள்ளது

 

புதுச்சேரி உப்பளம் பகுதியில் அமைந்துள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மாநில செயலாளர் அன்பழகன்.

சின்னஞ்சிறு மாநிலமான புதுச்சேரி மாநிலம் தமிழகத்திற்கு பெட்ரோல், டீசல் கடத்தப்படும் மாநிலமாகவும், தங்கு தடை இல்லாமல் தமிழகத்திற்கு மதுபானம் கடத்தும் மாநிலமாகவும் இருந்து வருகிறது.

இந்த சூழ்நிலையில் இப்பொழுது அகில இந்திய அளவில் தங்கு தடை இன்றி உயர்தர போதைப் பொருட்கள் விற்பனை செய்யும் கேந்திரமாக புதுச்சேரி மாநிலம் மாற்றப்பட்டுள்ளது.

புதுச்சேரி மாநிலத்திற்கு வருவாய் பெருக்க பல வழிகள் இருந்தும் புதுச்சேரியை ஆளும் பாஜக கூட்டணி அரசானது ரெஸ்டோ பார் என்ற பெயரில் தனது ஆதரவாளர்களுக்காக இந்தியாவில் உள்ள அனைத்து சட்ட விரோத செயல்களையும் நிகழ்த்திக் கொள்ள தொடர்ந்து அனுமதி அளித்துள்ளது. தற்பொழுது புதுச்சேரி நகரப் பகுதி மட்டும் அல்லாமல் தமிழகம் ஒட்டியுள்ள பகுதிகளிலும் குறிப்பாக மருத்துவ கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் இயங்கக்கூடிய பகுதிகளிலும் அதிக அளவில் ரெஸ்டோபார்கள் திறக்கப்பட்டுள்ளன. அந்த ரெஸ்டோபார்களில் மதுபான விற்பனை என்ற நிலை மாறி ஆடல் பாடல், அரைகுறை ஆடை, விபச்சாரம் என்பன தினசரி இரவு 3 மணி வரை காவல்துறையினர் நேரடி அரவணைப்பில் நடத்தப்படுகிறது. இந்த நிலை தற்போது மாறி அனைத்து ரெஸ்டோபார்களிலும் உலக அளவில் எந்தெந்த போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுமோ அவையெல்லாம் புதுச்சேரி மாநிலத்தில் கடத்திவரப்பட்டு படிக்கும் இளைஞர்கள் மத்தியிலும், புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மத்தியிலும் தங்கு தடையின்றி விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு ஜிப்மர் மருத்துவமனை வளாகத்தில் நாக்கின் அடியில் வைக்கக்கூடிய போதை பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் கிருமாம்பாக்கம் மருத்துவ கல்லூரியில் இரண்டு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வெளிநாட்டு தயாரிப்பு போதை பொருட்கள் அங்கு தங்கு தடையின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதையும் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீஸ் கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இது போன்ற போதைப் பொருட்களால் கோவா மாநிலம் சீரழிந்ததால் அங்கு ரெஸ்டோபார்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. போதை பொருட்கள் நடமாட்டத்தை தடுக்க அங்கு கடுமையான சட்டங்கள் விதிக்கப்பட்டுள்ளது. 10 ஆண்டுகள் முன்பு இருந்த கோவாவை விட இன்று புதுச்சேரி மாநிலம் சமூக சமுதாய சீரழிவின் கடைசி நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றது. இங்கு ஆட்சியில் உள்ள அரசும், சர்வ வல்லமை படைத்த பெண்ணான துணைநிலை ஆளுநரும் இவற்றை தடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது ஒரு தலைமுறையை வீணாக்கும் பாழடிக்க கூடிய ஒரு செயலாகும்.

தற்போது தொடர்ந்து பிடிபட்டு வரும் உயர்ரக போதை பொருட்களை புதுச்சேரி மாநில காவல்துறையால் முழுமையாக கட்டுப்படுத்த முடியாது. இதில் பல மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் புதுச்சேரியை கேந்திரமாக பயன்படுத்திக் கொண்டு அவர்கள் தமிழகத்தில் உள்ளவர்களோடு கூட்டணி அமைத்துக் கொண்டு இந்த போதைப் பொருள் விஷயத்தில் தடை இன்றி வியாபாரத்தை நடத்தி வருகின்றனர். எனவே மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு புதுச்சேரியில் முகாமிட்டு உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுச்சேரி மாநிலம் முழுவதும் பள்ளிக்கூடங்கள் மற்றும் பொறியியல் கல்லூரி, மருத்துவ கல்லூரி படிக்கும் மாணவர்கள் மற்றும் சுற்றுலா பணிகள் மத்தியில் நீக்கம் நிர இந்த போதை வஸ்துக்கள் அதிகரித்துள்ளது. இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் இன்னும் 10 ஆண்டுகளில் இந்திய அளவில் புதுச்சேரி மாநிலம் கேவலமாக இருக்கக்கூடிய சூழல் நிச்சயம் ஏற்படும்.

மத்திய மாநில அரசுகள் ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் ஆதரவுகளோடு இந்த ரெஸ்டோபார்கள் நடத்தப்படுவதால் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையினர் இந்த பிரச்சனையிலிருந்து நேரடியாக தலையிட்டு விசாரணை நடத்த வேண்டும். கல்லூரி மாணவர்கள் மத்தியில் விற்பனை செய்யப்படும்போது அந்த மாணவர் மீது கல்வி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவ்வாறு நடவடிக்கை எடுக்காத கல்லூரி நிர்வாகத்தினர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.இது சம்பந்தமாக தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறை தலைவரை ஓரிரு தினங்களின் நேரில் சந்தித்து கடிதம் அளிக்க உள்ளோம் என தெரிவித்தார்…

What do you think?

பேனரில் தன் பெயர் இல்லாததால் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி ஆத்திரம்

முன்னனி நடிகர்களுக்கு கொடுக்கும் சான்ஸ்சை பாலாவுக்கு கொடுங்கள் ரசிகர்கள் வேண்டுகோள்