in

கோயில் மண்டகப்படி உரிமையை தர மறுப்பதை கண்டித்து சாலை மறியல்


Watch – YouTube Click

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வருடத்திற்கு ஒருமுறை அளிக்கப்படும் கோயில் மண்டகப்படி உரிமையை தர மறுப்பதை கண்டித்து சாலை மறியல்

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே நமச்சிவாயபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட செம்மங்குடி பகுதியில் பழமையான மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது இந்த ஆலயத்தில் சித்திரை ஒன்றாம் தேதி வருடப்பிறப்பு அன்று சுவாமிக்கு மண்டகப்படி எனப்படும் அபிஷேக ஆராதனை செய்யப்படும் வைபவம் அப்பகுதியைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட மக்களால் செய்யப்படும்.

இந்நிலையில் இந்த ஆண்டு வருடப் பிறப்பு என்று தாழ்த்தப்பட்ட மக்கள் மண்டகப்படி செய்யக்கூடாது என்று மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த நபர்கள் கூறியுள்ளனர். மேலும் இந்த ஆண்டு நடைபெற்ற தீமிதி திருவிழாவில் தாழ்த்தப்பட்ட பகுதி வழியாக சுவாமி ஊர்வலம் செல்லக்கூடாது என்பதற்காக சுவாமி ஊர்வலத்தை நடைபெறாமல் தடுத்து விட்டனர் என்று கூறி பொதுமக்கள் என்று நமச்சிவாயபுரம் கடைவீதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர் காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். தங்களுக்கு உண்டான உரிமை மறுக்கப்பட்டால் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட போவதாக அப்போது அவர்கள் தெரிவித்தனர்.


Watch – YouTube Click

What do you think?

மேல்மலையனூர் அங்காளம்மன் ஆலயத்தில் பங்குனி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம்

பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் திலகபாமா பறை இசைத்தும் நடனமாடியும் வாக்கு சேகரித்தார்