in

நீதிபதி தேர்வில் வெற்றி பெற்ற மலை வாழ் பெண்


Watch – YouTube Click

நீதிபதி தேர்வில் வெற்றி பெற்ற மலை வாழ் பெண்

 

ஜமுனாமரத்தூர் , புலியூர் கிராமத்தை சேர்ந்த , நீதிபதி தேர்வில் வெற்றி பெற்ற மலை வாழ் பெண் வெற்றி பெற்ற ஸ்ரீபதிக்கு கிராம மக்கள் வாழ்த்து

திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் அடுத்த புலியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கட்ராமன் இவர் 108 ஆம்புலன்ஸில் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஸ்ரீபதி (வயது 23) திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரியில் பள்ளி படிப்பை முடித்த ஸ்ரீபதி L L B., பட்டப்படிப்பு முடித்துவிட்டு

கடந்த 2023 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு நடத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்திய உரிமையியல் நீதிபதி தேர்வில் கலந்துகொண்டு வெற்றி பெற்றுள்ளார்.

ஸ்ரீபதி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து விரைவில் ஆறு மாத பயிற்சிக்கு செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. மலைவாழ் இன மாணவியான ஸ்ரீபதி நீதிபதி தேர்வில் வெற்றி பெற்றதை தொடர்ந்து கிராம மக்கள் உற்சாகத்துடன் ஸ்ரீபதியை வரவேற்றனர்.

மேலும் மாணவி ஸ்ரீபதி நீதிபதி தேர்வில் வெற்றி பெற்றது மலைவாழ் இன மக்களான எங்களுக்கு மிகுந்த பெருமை அளிப்பதாகவும் மிகப்பெரிய அளவில் கல்வி கற்க எவ்வித வசதியும் இல்லாத நிலையில் 21 வயதில் திருமணமான ஸ்ரீபதி திருமணம் முடிந்த பிறகும் கணவர் வெங்கட்ராமன் உதவியோடு பட்டப்படிப்பு படித்து முடித்து ஸ்ரீபதி பிரசவம் முடிந்த இரண்டாம் நாள் நீதிபதி தேர்வு எழுத சென்று அவரது விடாமுயற்சியால் தற்போது இந்த வெற்றியை பெற்றுள்ளார். இதனை நினைத்து நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம் என கிராம மக்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.


Watch – YouTube Click

What do you think?

மாணவிகளுக்கு சிலம்பம் பயிற்சி அரசு பள்ளியில் முதல் முயற்சி

மதுராந்தகத்தில் புதிய பேருந்து நிலையம கட்டடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா