in , ,

2024 நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் | Election Result 2024 Updates | Lok Sabha Results 2024

 

நெல்லை நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 620 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

திருநெல்வேலி பாளையங்கோட்டை உள்ளிட்ட ஆறு சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதி வாக்கு என்னும் மையம் நெல்லை அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டது இங்கு 24 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டது இதில் காங்கிரஸ் சார்பில் நெல்லை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர் ராபர்ட் ப்ரூஸ் 5 லட்சத்து 2 ஆயிரத்து 296 வாக்குகளும், பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்ட நயினார் நாகேந்திரன் 3 லட்சத்து 36 ஆயிரத்து 676 வாக்குகளும் பெற்றனர். இதேபோல் அதிமுக வேட்பாளர் ஜான்சி ராணி 89 ஆயிரத்து 601 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட சத்யா 87 ஆயிரத்து 686 வாக்குகளும் பெற்றனர் அனைத்து வேட்பாளர்களை விட ஒரு லட்சத்து 65 ஆயிரம் 620 வாக்குகள் கூடுதலாக பெற்ற காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ராபர்ட் குரூஸ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இதற்கான சான்றிதழை நெல்லை நாடாளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான கார்த்திகேயன் வேட்பாளர் ராபர்ட்புரூஸிடம் வழங்கினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வெற்றி பெற்ற வேட்பாளர் ராபர்ட் ப்ரூஸ் எனது வெற்றிக்கு பாடுபட்ட அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ,அன்னை சோனியா ,ராகுல் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்டோருக்கும் தோழமைக் கட்சியினருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் தொகுதியில் தங்கியிருந்து மக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்வேன், தொகுதி வளர்ச்சிக்கு பாடுபடுவேன் என தெரிவித்தார்.

நெல்லை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தது குறிப்பிடத்தக்கது
இந்த நிகழ்ச்சியில் நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன், சட்டமன்ற உறுப்பினர் அப்துல்வகாப், மாவட்ட திமுக அவைத்தலைவர் கிரகம்பெல், காங்கிரஸ் கட்சி மாநகர் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

கரூர் நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி வெற்றி பெற்றுள்ளார்.

கரூர் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை முடிவு.

Congress – 5,31,829
Admk – 3,66,209
NTK – 92,354
BJP – 96,125

அதிமுக வேட்பாளர் தங்கவேளை விட 1,65,620 வாக்குகள் வித்தியாசத்தில் இந்திய கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி வெற்றி பெற்றுள்ளார்.

 

நாகை நாடாளுமன்ற தொகுதி இறுதி சுற்று வாக்கு எண்ணிக்கை அதிகாரப்பூர்வ முடிவு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வை செல்வராஜ் – 4,65,044
அதிமுக டாக்டர் சுர்ஜித் சங்கர் – 2,56,087
பாஜக ரமேஷ் கோவிந்த் – 1,02,173
நாம் தமிழர் கார்த்திகா – 1,31,294

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் வை. செல்வராஜ் 2,089,57வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

 

கடலூர் மக்களவை தொகுதி இறுதி சுற்று முடிவு

அதிமுக (தேமுதிக) – 270607
திமுக(காங்கிரஸ்) – 459705
பாஜக(பாமக) – 208116
நாம் தமிழர் – 58185

22-வது சுற்றில் காங்கிரஸ் வேட்பாளர் DR. விஷ்ணுபிரசாத் 189098 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்

தஞ்சாவூர் மக்களவை தொகுதி இறுதி சுற்று முடிவு

திமுக 5,02,245

தேமுதிக 1,82,662

பாஜக 1,70,613

நாம் தமிழர் 1,20,293

திமுக வேட்பாளர் முரசொலி 3,19,583 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

திருச்சி மக்களவை தொகுதி இறுதிச் சுற்று முடிவு

திருச்சி நாடாளுமன்ற தொகுதி மதிமுக வேட்பாளர் துரை வைகோ வெற்றி

 

பெரம்பலூர் மக்களவை தொகுதி இறுதிச் சுற்று முடிவு

பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் அருண் நேரு வெற்றி பெற்றார்

 

மதுரை மக்களவை தொகுதி இறுதிச் சுற்று முடிவு

மதுரை மக்களவைத் தொகுதியில் 2 ஆம் முறையாக 2,09,409 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சு.வெங்கடேசனுக்கு மாவட்ட ஆட்சியர் சங்கீதா வெற்றி சான்றிதழை வழங்கினார்

 

Watch – YouTube Click

 

விருதுநகர் தொகுதி 8 சுற்று முடிவில்

காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர்154605 வாக்குகளும்
தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் 154257 வாக்குகளும்
பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் 59716 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

7 சுற்றுகள் வரை தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன் முன்னிலை வகித்து வந்த நிலையில் தற்போது 8 வது சுற்று முடிவில் விஜயபிரபாகரனை பின்னுக்கு தள்ளி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் 348 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார்.

 

நாகை நாடாளுமன்ற தொகுதி 16 வது சுற்று வாக்கு எண்ணிக்கை அதிகாரப்பூர்வ முடிவு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வை செல்வராஜ் – 3,89,526
அதிமுக டாக்டர் சுர்ஜித் சங்கர் – 2,15,896
பாஜக ரமேஷ் கோவிந்த் – 86,983
நாம் தமிழர் கார்த்திகா – 1,12,803

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் செல்வராஜ் 1,73,630 வாக்குகள் கூடுதலாக பெற்று முன்னிலை

 

மதுரை நாடாளுமன்றத் தொகுதி இறுதிச் சுற்று முடிவு

சிபிஎம் சு. வெங்கடேசன்4,27,459
அதிமுக டாக்டர் சரவணன்2,04,011
பாஜக பேராசிரியர் ஸ்ரீனிவாசன்2,18,907
நாம் தமிழர் சத்யா தேவி92,261

*சிபிஎம் சு.வெங்கடேசன் இறுதிசுற்று முடிவில் 2,08,552 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்

மதுரை நாடாளுமன்ற தொகுதி திமுக கூட்டணி கட்சியான மார்க் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சு.வெங்கடேசன் இரண்டாவது முறையாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த தேர்தலை காட்டிலும் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்த மதுரை நாடாளுமன்ற தொகுதி வாக்காளர் பெருமக்களுக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்

 

திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் 20 ஆயிரத்தை கடந்த நோட்டா…

திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் 20 வது சுற்று முடிவில் 3,90619 வாக்கு வித்தியாசத்தில் திமுக கூட்டணி கட்சியான சி.பி.எம் கட்சி வேட்பாளர்
சச்சிதானந்தம் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வரும் நிலையில்

20 வது சுற்றின் முடிவில் 20105 நோட்டா வாங்கி ஐந்தாவது இடம் பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.


Watch – YouTube Click

நாகை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட 06 சட்டமன்ற தொகுதியிலும் இறுதி வாக்கு சுற்று நடைபெற்றது.

நாகை நாடாளுமன்ற தொகுதியில் பதிவான 9,67,031 வாக்குகள் எண்ணப்பட்டு 6 சட்டமன்ற தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை நிறைவு. வாக்கு இயந்திரம் பழுது காரணமாக 1524 ஓட்டுகள் மட்டும் எண்ணப்படாமல் உள்ளது. இதுவரை 289824 வாக்குகள் பெற்று 135000 வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஐ வேட்பாளர் வை.செல்வராஜ் வெற்றி முகத்தில் உள்ளார். நாகை சட்டமன்ற தொகுதியில் 38,39 நம்பர் வாக்கு இயந்திரம் பழுது காரணமாக 1524 ஓட்டுகள் மட்டும் எண்ணப்படாமல் உள்ளது.

 

திருச்சி பாராளுமன்ற தொகுதியில் மொத்த வாக்குகள் 3.30pm மணி நேர நிலவரம். 13-வது சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

மதிமுக – துரை வைகோ – 3,39,288, அதிமுக – கருப்பையா – 1,37,869, அமமுக-செந்தில்நாதன் – 67,871, நா.த.க – ராஜேஷ் – 53,805, 2,01,419 வாக்குகள் வித்தியாசத்தில் துரை வைகோ தொடர்ந்து முன்னிலை.

 

Watch – YouTube Click

நெல்லை பாராளுமன்ற தொகுதியில் 19 வது சுற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது..

இதில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் ப்ரூஸ் 4,45,798 வாக்குகளும், பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் நயினார் நாகேந்திரன் 2,92,532 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் ஜான்சி ராணி 77,565 வாக்குகளும், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சத்யா 75,034 வாக்குகளும், பெற்றுள்ளனர். இதில் ராபர்ட் புரூஸ் 1,53,266 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னணியில் உள்ளார்.


Watch – YouTube Click

மதுரை பாராளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணி வேட்பாளர் சு.வெங்கடேசன் பேட்டி

இந்த வெற்றி மதுரை மக்கள் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வர வேண்டும் என்கிற உறுதியான அரசியல் வெளிப்பாட்டுக்கு கிடைத்த வெற்றி. கடந்த ஐந்தாண்டு காலம் நாங்கள் செய்த சேவைக்கு கிடைத்த வெற்றி. மதுரையில் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்கும். ஒரு புதிய இந்தியா ஆட்சி அமைக்கும். -மதுரை பாராளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணி வேட்பாளர் சு.வெங்கடேசன் பேட்டி

மதுரை பாராளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இந்தியா கூட்டணியின் வேட்பாளரும் மதுரை எம்பியுமான கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சு வெங்கடேசன் கிட்டத்தட்ட 2 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் முன்நிலையில் உள்ளார். வாக்கு என்னும் மையத்திற்கு வந்த அவரை மாலை அணிவித்து, சால்வை கொடுத்து, தாரை தப்பட்டை உடன் வரவேற்றனர். தற்போது அவர் செய்தியாளர்களை சந்தித்துக் கூறியதாவது:

மதுரையில் இந்தியா கூட்டணி வேட்பாளரான எனக்கு 2 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வாய்ப்பளித்த மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். வெற்றி பெற உழைத்த கூட்டணி கட்சி தலைவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வெற்றி மதுரை மக்கள் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வர வேண்டும் என்கிற உறுதியான அரசியல் வெளிப்பாட்டுக்கு கிடைத்த வெற்றி. கடந்த ஐந்தாண்டு காலம் நாங்கள் செய்த சேவைக்கு கிடைத்த வெற்றி. மதுரையில் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்கும். ஒரு புதிய இந்தியா ஆட்சி அமைக்கும்.

மதுரை தொடர்ச்சியாக இடதுசாரி அரசியல் களம். மதுரையில் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் இந்த வெற்றி அமைந்துள்ளது. உணர்ச்சி பூர்வமான மகத்தான தலைவர்கள் மற்றும் தோழர்களின் சேவைக்காக மக்கள் தருகிற பரிசாக கருதுகிறோம்.

What do you think?

மதுரை நாடாளுமன்ற தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு வெங்கடேசன் பேட்டி

கிளைமாக்ஸ் நோக்கி எதிர்நீச்சல் சீரியல்…மற்ற சீரியல்களின் நேரம் மாற்றம்