in

புதுவை துறைமுகத்தில் ஹெலிகாப்டரில் இருந்து இறங்கி வந்த ரஜினிகாந்த்

புதுவை துறைமுகத்தில் ஹெலிகாப்டரில் இருந்து இறங்கி வந்த ரஜினிகாந்த்

ரஜினிகாந்த் தற்பொழுது ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இப் படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் மட்டும் எடுக்கப்படாத நிலையில் நேற்று புதுவை துறைமுகத்தில் வேட்டையன் படத்தின் இறுதி கட்ட காட்சிகள் படமாக்கப்பட்டது.

ஏற்கனவே வேட்டையன் படத்தின் சில காட்சிகள் புதுவையில் படமாக்கப்பட்ட நிலையில் நேற்று ரஜினிகாந்த் ஹெலிகாப்டரில் இருந்து துறைமுகத்தில் இறங்குவது போன்ற காட்சிகள் நேற்று படமாக்கப்பட்டது.

ஹெலிகாப்டர் இறங்க அனுமதி பெற தாமதமானதால் நேற்று முன்தினம் மாலை அனுமதி கிடைத்தவுடன் துறைமுக வளாகத்தில் ரஜினிகாந்த் மற்றும் ராணா சம்பந்த பட்ட இறுதிக்கட்ட காட்சிகள் படமாக்கப்பட்டது.

தகவல் அறிந்த ரசிகர்கள் துறைமுக வளாகத்தை முற்றுகையிட்ட போது காவலர்கள் பொதுமக்களை உள்ளே நுழைய அனுமதிக்காமல் படப்பிடிப்பு நடத்த பட்டது.

மேலும் ஒரு சில நாட்கள் வேட்டையன் படப்பிடிப்பு புதுவையில் நடக்க போவதாக தகவல் வெளியானது.

What do you think?

இந்தியன் 2 ஜூன்..னில் ரிலீஸ் ஆகாதா?.. Lycaa..வை வெச்சி செய்யும் சங்கர்

மீண்டும் வெளியாகும் விஜய்..யின் வில்லு