in

ஒழகச்சேரி ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசை!

ஒழகச்சேரி ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசை!

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கடந்த 16-ம் தேதி திங்கட்கிழமை யாகசாலை பூஜைகள் தொடங்கியது. விக்னேஷ்வர பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம், வாஸ்து சாந்தி, கோ பூஜை நடைபெற்றது.

காவிரி ஆற்றில் இருந்து கலசங்களில் புனிதநீர் கொண்டு வரப்பட்டு, கும்ப அலங்காரத்துடன் யாகசாலை பிரவேசம் நடைபெற்று, முதல் கால யாக பூஜைகள் தொடங்கின.

தொடர்ந்து இன்று 4-ம் கால யாகசாலை பூஜை பூர்ணாஹூதியுடன் நிறைவு பெற்றது. அதனைத் தொடர்ந்து மகா தீபாராதனை செய்யப்பட்டு, நாதஸ்வர மேள தாள மங்கல வாத்தியங்கள் முழங்க, பூமாரி பொழிய கடங்கள் புறப்பாடு நடைபெற்றது. பின்னர் மூலவர் விமான கலசத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து, சிவாச்சாரியார்கள் புனித நீரை ஊற்ற மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பிறகு மூலவர் மாரியம்மனுக்கு விசேஷ கலசாபிஷேகம், பாலபிஷேகம் நடைபெற்றது. மாலையில் அம்பாள் புஷ்ப அலங்காரத்துடன் சக்தி கரகம் வீதி உலா நடைபெற்றது. இந்த விழாவில் திருவாவடுதுறை ஸ்ரீல ஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் கலந்து கொண்டு ஆசி வழங்கினார். ஞான சரவணவேல் குடும்பத்தினர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

What do you think?

பாக்ஸ் ஆபீஸில் கடும் போட்டி! ஒரே நாளில் வெளியாகும் 9 புதிய திரைப்படங்கள்!

மயிலாடுதுறையில் கொளத்தூர் எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு மறைவிற்கு தவெகவினர் மௌன ஊர்வலம் – மலர் தூவி அஞ்சலி