in

2028 மகாமகம் விழா பாலாலயம் துவக்கம்

2028 மகாமகம் விழா பாலாலயம் துவக்கம்

 

2028 மகாமகம் விழாவை முன்னிட்டு கும்பகோணத்தில் காசி விஸ்வநாதர் கோயிலில் பாலாலயம் துவக்கம்

ஆண்டுதோறும் மாசி மாதத்தில் மாசிமகம் கொண்டாடப்படுகிறது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகாமகம் பெருவிழாவாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் 2028-ஆம் ஆண்டு கும்பகோணத்தில் மகாமகப் பெருவிழா நடைபெற உள்ளது.

இந்நிலையில் காசி விஸ்வநாதர் கோயில் மற்றும் மகாமகக் குளத்தை சுற்றிலும் 16 வகையான தானங்களை வலியுறுத்தும் வகையில் 16 மண்டபங்கள் அமைந்துள்ளன.

இதில் ஒவ்வொரு மண்டபத்திலும் பிரம்மதீர்த்தேஸ்வரர், முக்தேஸ்வரர், தனேஸ்வரர், விருஷபேஸ்வரர், புரணேஸ்வரர், கோணேஸ்வரர், பக்திகேஸ்வரர், பைரவேஸ்வரர், அகஸ்தீஸ்வரர், வியாசகேஸ்வரர், உமாபாகேஸ்வரர், நிருதீஸ்வரர், பிரம்மேஸ்வரர், கங்காதேஸ்வரர், முக்ததீர்த்தேஸ்வரர், சேஷஸ்தரபாலேஸ்வரர் என மொத்தம் 16 சிவலிங்கங்கள் அமைந்துள்ளன. இவை அனைத்தும் சோடச மகாலிங்க சுவாமிகள் என்று அழைக்கப்படுகிறது.

இந்த கோயில் மற்றும் 16 மண்டபங்களுக்கும் இந்து சமய அறநிலையத் துறை நிதியிலிருந்து ரூ.3 கோடியே 17 லட்சம் மதிப்பில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, 2028-க்குள் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக பாலாலயம் பணிகள் இன்று துவங்கப்பட்டது.

மகாமகம் விழாவிற்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்கள் வசதிக்காக திருப்பணிகள் வேகமாக நடைபெற்று வருவதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

What do you think?

கந்த சஷ்டி விழா முத்தங்கிசிறப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான்

ஸ்ரீ ராமசுவாமி திருக்கோயில் மகாமகப் பெருவிழா பாலாலயம்