தமிழ் சங்கமம் விரைவு வண்டியில் 20 கிலோ குட்கா பறிமுதல்
கும்பகோணத்தில் பனாரஸ் – கன்னியாகுமரி காசி தமிழ் சங்கமம் விரைவு வண்டியில் 20 கிலோ குட்கா பறிமுதல்
கும்பகோணத்தில் ரயில் நிலைய நடைமேடையில் இன்று காலை 11.30 மணியளவில் பனாரஸ் – கன்னியாகுமரி காசி தமிழ் சங்கமம் விரைவு வண்டியில் ரயில்வே போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது வண்டியின் பின்பக்க பொது பெட்டியில் சந்தேகத்திற்கிடமாக இருந்த பையை சோதனை செய்த போது, அதில் தடை செய்யப்பட்ட சுமார் 20 கிலோ மதிப்புள்ள குட்கா, புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது.
இந்த சோதனையை உதவி ஆய்வாளர் செந்தில்வேலன், பெண் சிறப்பு உதவி ஆய்வாளர் முத்துலட்சுமி, தலைமைக் காவலர்கள் வெங்கடேசன், ராஜசேகர் ஆகியோர் கொண்ட குழுவினர் நடத்தினர்.

பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பொருட்களை ரயில்வே காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து உணவு பாதுகாப்பு அதிகாரியிடம் ஒப்படைத்தனர். இது தொடர்பாக ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

