நாடு முழுவதும் ‘Nasha Mukt Yuva – Sundays on Cycle’ நிகழ்ச்சி
புதுச்சேரி உள்ளிட்ட நாடு முழுவதும் நாளை ‘Sundays on Cycle’ நிகழ்ச்சி–இளைஞர்கள், பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு Sundays on Cycle…
போதைப்பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்கும் நோக்கில், இளைஞர்கள் மற்றும் பொதுமக்களிடையே உடற்பயிற்சி, சைக்கிள் பயன்பாடு மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிக்கும் வகையில், நாடு முழுவதும் ‘Nasha Mukt Yuva – Sundays on Cycle’ நிகழ்ச்சி நாளை நடைபெற உள்ளது.
இதற்கான நிகழ்ச்சி கடந்த 2024-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, 100-வது வார நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
இந்தியாவில் 700 இடங்களில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் ஆகிய நான்கு பிராந்தியங்களிலும் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
புதுச்சேரி நகரப் பகுதியில் இந்திய விளையாட்டு ஆணையம் (Sports Authority of India) சார்பில் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
ஏனாம் பகுதியில் ஜி.எம்.சி. பாலயோகி விளையாட்டு வளாகத்திலும், காரைக்காலில் வ.உ.சி. அரசு பள்ளியிலும், மாஹேவில் மாஹே சிவில் ஸ்டேஷன் பகுதியிலும் சைக்கிள் பேரணி நடைபெற உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் இளைஞர்கள் மட்டுமின்றி பொதுமக்கள் அனைவரும் திரளாகப் பங்கேற்று, போதைப்பொருள் இல்லாத ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்க ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.


