in

பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க பதிவாளர் அலுவலகம் முன்பு போராட்டம்

பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க பதிவாளர் அலுவலகம் முன்பு போராட்டம்

 

புதுச்சேரி பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என வலியுறுத்தி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க பதிவாளர் அலுவலகம் முன்பு காத்திருப்பு மௌன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரிக்கு நாள் ஒன்றுக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் லிட்டர் பால் தேவை இருக்கிறது, ஆனால் புதுச்சேரியில் 30 ஆயிரத்திலிருந்து 35 ஆயிரம் லிட்டர் பால் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது.மீதம் தேவையான பால் கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது.

கூட்டுறவு சங்கம் புதுச்சேரியில் உற்பத்தியாகும் பாலை லிட்டர் 41 ரூபாய்க்கும், வெளி மாநிலத்திலிருந்து வாங்கப்படும் பால் லிட்டர் 53 ரூபாய்க்கும் கொள்முதல் செய்கிறது.இதற்கு பால் உற்பத்தியாளர்கள் கடுமையான கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் புதுச்சேரி உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் பால் விலையை உயர்த்த வேண்டும் என வலியுறுத்தி தட்டாஞ்சாவடி கூட்டுறவு சங்க பதிவாளர் அலுவலகம் முன்பு காத்திருப்பு மௌன போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர்.

அதன்படி கூட்டுறவு சங்க பதிவாளர் அலுவலகம் முன்பு ஒன்று திரண்ட பால் உற்பத்தியாளர்கள் பால் கொள்முத விலையை உயர்த்த வேண்டும் என வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து பால் உற்பத்தியாளர்கள் கூறும்போது..

மாட்டு தீவனங்கள் விலை அதிக அளவில் உயர்ந்துள்ள நிலையில் வெளி மாநிலத்திலிருந்து லிட்டருக்கு 53 ரூபாய் கொடுத்து பால் கொள்முதல் செய்யும் அரசு, புதுச்சேரி பால் உற்பத்தியாளர்களிடம் லிட்டர் 41 ரூபாய்க்கு கொள்முதல் செய்கிறது.

இது ஏற்புடையது அல்ல எனவே உடனடியாக பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும், அப்படி இல்லாத பட்சத்தில் உற்பத்தியாகும் பாலை அரசுக்கு வழங்காமல் வெளிச்சந்தையில் விற்கப் போவதாகவும் எச்சரித்து உள்ளனர்.

What do you think?

ஜோனிதா காந்தி – அனிருத் குறித்து எழுந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி…