in

சக்கரப்பட்டி சித்தர் ஆலயம் 14-ம் ஆண்டுகுருபூஜை விழா

சக்கரப்பட்டி சித்தர் ஆலயம் 14-ம் ஆண்டுகுருபூஜை விழா

 

நாமக்கல் பரமத்தி வேலூர் அருகே சக்கரப்பட்டி சித்தர் ஆலயத்தில் 14-ம் ஆண்டுகுருபூஜை விழா

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் வட்டம் பாண்டமங்கலம் அருகே உள்ள கோப்பனம்பாளையம் அருள்மிகு சக்கரப்பட்டி சித்தர் என்கிற சதானந்த சித்தர் 14ஆம் ஆண்டு குருபூஜை விழா சிறப்பாக நடைபெற்றது.

விழாவின் நிகழ்வாக 25.11.26 புதன்கிழமை கார்த்திகை 9ம் நாள் கோப்பனம்பாளையம் சக்கரப்பட்டி சித்தர் ஆலயம் முழுவதும் வர்ண நறுமண மலர்களால் மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

காலை 5 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி வழிபாடு நடைபெற்று 5.30 மணிக்கு பலவகை வாசனை திரவியங்களினால் சிறப்பு அபிஷேகமும் அதனை தொடர்ந்து காலை 10:30 மணிக்கு மேல் கணபதி பூஜையுடன் கைலாய வாத்தியங்கள் சங்கநாதம் முழக்கத்துடன் யாக நிகழ்வுகள் நடைபெற்று கலசங்கள் ஸ்தாபிக்கப்பட்டு 108 சமித்துக்கள் யாக வேள்வியில் தேவாரம் திருவாசகம் ஓதலுடன் மகா பூர்ணகுதி சமர்ப்பிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து 12 மணி அளவில் சக்கரப்பட்டி சித்தருக்கு 108 அஷ்டோத்திர மந்திரங்கள் கூறி நாம வழிகளுடன் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மதியம் 251 சாதுக்கள் கலந்து கொண்டு மகேஸ்வர பூஜை நடைபெற்று அனைவருக்கும் அன்னம் பாலிப்பு நடைபெற்றது.

இதில் 3000க்கு மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டது. விழா ஏற்பாட்டினை சக்கரப்பட்டி சித்தர் ஆலய நிர்வாகியான சிவ. திருமதி.

சிவ சரண்யா சரவணா அவர்களுடன் சிவனடியார்களும் அடியார் பெருமக்களும் ஊர்பொது மக்களும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பாக செய்திருந்தனர்.

What do you think?

விருத்தாசலம் ஆற்றில் மருத்துவக் கழிவுகள்? பொதுமக்கள் அதிர்ச்சி!

ஜோனிதா காந்தி – அனிருத் குறித்து எழுந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி…