in

நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுவதை ஒட்டி மத்திய பாதுகாப்பு படையினரின் கொடி அணிவகுப்பு


Watch – YouTube Click

நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுவதை ஒட்டி நெல்லை மாநகர காவல் துறை துணை ஆணையாளர் தலைமையில் மத்திய பாதுகாப்பு படையினர் கலந்து கொண்ட கொடி அணிவகுப்பு நெல்லை மாநகர் பகுதியில் நடைபெற்றது.

நாடாளுமன்ற தேர்தல் இன்னும் ஒரு சில நாட்களில் நடைபெற உள்ள நிலையில் தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவின்படி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு மத்திய பாதுகாப்பு படையினர் துணை ராணுவத்தினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் இந்த நிலையில் நெல்லை மாநகர் பகுதிக்கு வருகை தந்த ரயில்வே பாதுகாப்பு சிறப்பு படையினர் கலந்து கொண்ட கொடி அணிவகுப்பு நெல்லை மாநகர காவல் துறையின் மேற்கு மண்டல பகுதிகளில் நடைபெற்றது.

நெல்லை மேற்கு மண்டல துணை ஆணையாளர் கீதா தலைமையில் நடைபெற்ற இந்த கொடி அணிவகுப்பு நெல்லை டவுன் ஆர்ச் பகுதியில் இருந்து தொடங்கிய சுவாமி நெல்லையப்பர் கோவில் வழியாக சந்திப் பிள்ளையார் கோவில் வரை சென்றது தொடர்ந்து பேட்டை ரொட்டி கடை பகுதியில் இருந்து தொடங்கி பேட்டை ஐ டி ஐ கல்லூரி வரையிலும் தச்சநல்லூர் புறவழிச்சாலையில் தொடங்கிய அணிவகுப்பு காந்தி சிலை வரையிலும் அதே போல் நெல்லை சந்திப்பு பகுதிகளும் நடைபெற்றது இதில் மத்திய ரயில்வே பாதுகாப்பு சிறப்பு படையைச் சேர்ந்த ஒரு கம்பெனி வீரர்கள், நெல்லை மாநகர காவல் துறையினர்,ஆயுதப்படை காவலர்கள் மற்றும் அதிவிரைவு படையினர் 150 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்


Watch – YouTube Click

What do you think?

77 நிமிடங்கள் தொடர் சிலம்பம் மற்றும் வாள் சுற்றும் உலக சாதனை நிகழ்வு

புதுச்சேரிக்கு கல்வி சுற்றுலா வந்த மாணவ மாணவிகள் – பத்மஸ்ரீமுனுசாமி கைவினை கலைஞர் பேட்டி