in ,

மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோயில் தை மாத அமாவாசை- காலையில் சிறப்பு பூஜை


Watch – YouTube Click

மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோயில் தை மாத அமாவாசை- காலையில் சிறப்பு பூஜை

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில் அமாவாசை தோறும் ஊஞ்சல் உற்சவம் நடைபெறுவது வழக்கம்.

இன்று நள்ளிரவு அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடைபெற உள்ளதை தொடர்ந்து இன்று அதிகாலையில் திருக்கோயில் நடை திறக்கப்பட்டு மூலவர் மற்றும் உற்சவர் அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் அலங்காரமும் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றன.

உற்சவர் அங்காளம்மன் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.

ஊரில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக சித்தாங்கு மற்றும் அம்மன் வேடம் அணிந்து பக்தர்கள் நேர்த்திக் கடனை செலுத்தி வருகின்றனர்.

தை அமாவாசை தினமான இன்று காலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

தை அமாவாசை என்பதால் பக்தர்கள் அதிகம் வருகை புரிந்ததால் தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பாளர் தீபக் சுவாட்ச் தலைமையிலான போலீசார் பக்தர்களுக்கு பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.


Watch – YouTube Click

What do you think?

முதல்வர் ரங்கசாமியுடன் பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா சந்திப்பு…

எஸ் ஆர் எம் கல்விக் குழுமத்தில் “INNOVA FEST 24” கண்காட்சி