in

திருக்குறள் மாணவர் மாநாடு 2024


Watch – YouTube Click

திருக்குறள் மாணவர் மாநாடு 2024

 

விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ் இணையக் கல்விக் கழகம் இணைந்து நடத்திய தீராக் காதல் திருக்குறள் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் முதல் முறையாக தமிழ் திறனறித் தேர்வில் வெற்றி பெற்ற தமிழ்நாடு முழுவதிலிருந்தும் 1000 மாணவர்கள் பங்கேற்ற “திருக்குறள் மாணவர் மாநாடு 2024″ மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது. தொடங்கிய திருக்குறள் மாணவர் மாநாடு 2024 இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.

மேலும் இந்த திருக்குறள் மாணவர் மாநாடு தொடக்க நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் மற்றும் உலகத் திருக்குறள் பேரவை தலைவர் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் மற்றும் திரைப்பட இயக்குநர் பாரதி கிருஷ்ணகுமார் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

மேலும் திருக்குறள் மாணவர் மாநாடு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிறப்பு அழைப்பாளர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் நினைவு பரிசு வழங்கப்பட்டது.

பின்னர் திருக்குறள் மாணவர் மாநாடு தொடக்க நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன்.

தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் தீராக் காதல் திருக்குறள் என்ற திட்டத்தின் கீழ் திருக்குறள் மாணவர் மாநாடு 2024 என்ற நிகழ்ச்சி விருதுநகர் மாவட்டத்தில் நடத்தப்படுகிறது என்றார்.

மேலும் ஒரு தனி மனிதனுக்கு வாழ்வில் உறவுகள் மிக முக்கியம். கண்டிப்பு மிகுந்த தந்தை, அன்பை கொட்டி வளர்க்கும் அன்னை, தன் அனுபவங்களினால் வழி காட்டுவதற்கு தாத்தா பாட்டி, முயற்சிகளை ஊக்குவிக்கும் ஆசிரியர், எதிர்பாராத தோல்வி களில் நம்மை ஆற்றுப்படுத்தும் நண்பன் என ஒவ்வொரு உறவுகளுமே தனிமனித வாழ்வில் மிக முக்கியம் எனவும் இந்த அனைத்து உறவுகளும் இணைந்து ஒன்றாக இருக்க முடியும் என்றால் அது திருவள்ளுவராக தான் இருக்க முடியும் என்றார்.

பின்னர் திருக்குறள் மாணவர் மாநாடு தொடக்க நிகழ்ச்சியில் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பேசிய போது ஈராயிரம் ஆண்டு களுக்கு முன்பு எழுதப்பட்டது திருக்குறள்.

தற்போது எவ்வளவு நவீன தொழில் நுட்பங்கள் வந்தாலும், திருக்குறள் புதிய பொருளை தந்து கொண்டே இருக்கிறது. கல்வி ஒன்றுதான் மனிதனை மனிதனாக மாற்றும் வல்லமை உடையது. அத்தகைய கல்வியை பெறுவதற்கு திருக்குறள் ஒரு வழிகாட்டி என தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தெரிவித்தார்.

நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்,தமிழகம் முழுவதிலுமிருந்து தமிழில் ஆர்வமுடைய குறிப்பாக திருக்குறளில் ஆர்வமுடைய திறனறித்தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களை ஒருங்கிணைத்து,மாநாடு நடப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஓவியக்கண்காட்சியை திறந்து வைத்தோம்.மாணவர்கள் அர்ப்புதமான தங்களை கலைபடைப்புகளை வெளிக்கொண்டு வந்துள்ளனர்.

மாணவர்களின் சுயசிந்தனை, படைப்பாற்றலை ஒருங்கிணைத்து பிற மாநாடுகளை விட சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார். நல்ல முயற்சி, புதிய முயற்சி இதுவரை எங்கும் நடைபெறாத முயற்சி, மாவட்ட ஆட்சியரை பாராட்டுவோம் என்றார். திருக்குறளை பற்றிய சிந்தனை மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.


Watch – YouTube Click

What do you think?

நாம் தமிழர் கட்சியினர் வீட்டில் சோதனை

புதிய படித்துறை அமைக்க பூமி பூஜை