in

பாஜகவினர் வெற்றி பெற போவதே இல்லை


Watch – YouTube Click

பாஜகவினர் வெற்றி பெற போவதே இல்லை

புதுச்சேரியில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். பாஜகவினர் வெற்றி பெற போவதே இல்லை என காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் கூறினார்.

புதுச்சேரி மாநிலத்தில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலையொட்டி வேட்பு மனு தாக்கல் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே பிரதான கட்சிகளான பாஜக, அதிமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில், இறுதி நாளான இன்று காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வைத்திலிங்கம் வேட்புமனுவை தாக்கல் செய்ய மனக்குள விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை செய்துவிட்டு, சாரம் அவ்வை திடலில் இருந்து கூட்டணி கட்சிகளுடன் வேட்பாளர் வைத்திலிங்கம் ஊர்வலம்மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தொண்டர்கள் புடைசூழ வந்தார். பின்னர் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் வேட்புமனுவை மனுவை தாக்கல் செய்தார். பின்னர் வெளியே வந்த அவரை தொண்டர்கள் சூழ்ந்து கொண்டு அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தது மட்டுமல்லாமல் வெற்றி முழக்கங்களை எழுப்பினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம், பிரதமரையோ உள்துறை அமைச்சரையோ ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் பாஜக அரசு இதுவரை சென்று சந்தித்து நிதி ஆதாரம் தேவை குறித்து கேட்கவில்லை. மக்களுக்கு தேவையான இலவச அரிசியை இதுவரை ரேஷன் கடைகள் மூலமாக போடவில்லை. ரேஷன் கடைகளை திறக்கவே இல்லை. பாஜக வெற்றிபெறவே போவதில்லை. ஆட்சிக்கு வந்தால் தானே. பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றால் மத்திய மந்திரி கொடுப்பார்கள் என்ற கேள்விக்கு கோவாவில் வெற்றி பெற்றார்கள் ஆனால் இதுவரை மந்திரி பதவி கொடுக்கவில்லை. அதே நிலைதான் இங்கும் என கூறினார்.


Watch – YouTube Click

What do you think?

இணையத்தில் வைரலாகும் தோனி கேட்ச்

தலைவர் ஹரிஹரமுத்து தமிழ்நாடு பிராமண சமாஜம் பாஜக கூட்டணிக்கு ஆதரவு