in

மும்பையில் தேசிய பிளாஸ்டிக் கண்காட்சி. ரூ.200 கோடி பரிவர்த்தனை நடைபெறும் என எதிர்பார்ப்பு.

மும்பையில் தேசிய பிளாஸ்டிக் கண்காட்சி. ரூ.200 கோடி பரிவர்த்தனை நடைபெறும் என எதிர்பார்ப்பு.

மும்பையில் அடுத்த ஆண்டு (2027) ஜனவரி 21 முதல் 25-ந் தேதி வரை ‘பிளாஸ்டிவிஷன்’ மிகப்பெரிய கண்காட்சியை நஅனைத்திந்திய பிளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்கம் நடத்துகிறது.

இதில் பங்கேற்க வருமாறு புதுச்சேரி பிளாஸ்டிக் உற்பத்தியாளர்களுக்கு தேசிய நிர்வாகிகள் அழைப்பு விடுத்தனர். இதற்கான கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த பிளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்கத்தலைவர் பாபு,உலகளவில் பயன்படுத்தப்படும் அனைத்து பிளாஸ்டிக் பொருட்களும் மறுசூழற்சி செய்ய முடியும். இதுதொடர்பாக தெளிவான விளக்கத்தை அனைத்து நாடுகளிலும் சொந்த செலவில் நிரூபித்து காட்டி உள்ளோம்.

இந்தியாவில் மட்டும் சுமார் 65 முதல் 70 சதவீதம் வரை பிளாஸ்டிக் பொருள்கள் மறுசுழற்சி செய்யப்படுகின்றன. இதற்கான நடவடிக்கையை அனைத்திந்திய பிளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்கம் உறுதி செய்துள்ளதாக தெரிவித்தார்.

புதுச்சேரியில் உள்ள தொழிற்சாலைகளில் 90 சதவீதம் பிளாஸ்டிக் தொழிற்சாலைகள் தான். புதுச்சேரியை சேர்ந்த தொழில் முனைவோர்களை மும்பையில் நடைபெறும் கண்காட்சியில் பங்குபெற செய்து நவீன எந்திரங்கள், தொழில்நுட்பங்கள், சலுகைகளை தெரிந்துகொள்ள அழைப்புவிடுத்துள்ளனர். இந்த கண்காட்சியில் ரூ.200 கோடி பரிவர்த்தனை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுவதாக பாபு தெரிவித்தார்.

புதுச்சேரியில் அடுத்த கண்காட்சியை நடத்த அரசு முன்வர வேண்டும். தமிழகத்தை பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்ய மாவட்டத்திற்கு ரூ.10 கோடி ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தை போல புதுச்சேரியிலும் பிளாஸ்டிக் மறுசுழற்சி செய்ய அரசு முன்வரும் என்ற நம்பிக்கை உள்ளதாக பாபு கூறினார்.

What do you think?

சீர்காழியில் ஸ்ரீ வள்ளி, தெய்வானை சமேத ஸ்ரீ வேல்முருகன் ஆலயத்தில் திருக்கல்யாண வைபவம் 

புவனகிரி செல்வ கொளஞ்சியப்பர் ஆலயத்தில் கந்த சஷ்டி திருக்கல்யாண வைபவம்!