புவனகிரி செல்வ கொளஞ்சியப்பர் ஆலயத்தில் கந்த சஷ்டி திருக்கல்யாண வைபவம்!
கடலூர் மாவட்டம் புவனகிரி கடை வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்ல கொளஞ்சியப்பர் ஆலயத்தில் கந்த சஷ்டியை முன்னிட்டு சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் கோலாகலமாக நடைபெற்றது
இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி திருவிழா விமர்சையாக நடைபெறுவது வழக்கம் அதன்படி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது .
துவங்கிய நாள் முதல் நாள்தோறும் பல்வேறு வழிபாடுகள் சுவாமிக்கு நடைபெற்று வந்த நிலையில் விழாவின் நிறைவு பகுதியாக ஸ்ரீ வள்ளி தெய்வானை உடனுறை ஸ்ரீ செல்வ கொளஞ்சியப்பர் சுவாமியின் திருக்கல்யாண வைபவம் ஆலயத்தில் நடைபெற்றது.

கணபதி பூஜையுடன் துவங்கிய திருக்கல்யாண வைபவத்தில் திருமண சீர்வரிசையாக பல்வகை பழங்கள் பட்டு வஸ்திரங்கள் இனிப்பு வகைகள் உள்ளிட்ட பல்வேறு சீர் வரிசை பொருட்கள் தாம்பூலத் தட்டுக்கள் வைத்து பூஜிக்கப்பட்டது தொடர்ந்து சுவாமிக்கு காப்பு கட்டுதல் நடைபெற்று யாக வேள்வி வளர்க்கப்பட்டு திருமண சடங்குகள் நடைபெற்றது .
இதன் பின்னர் கன்னிகாதானம் நடைபெற்று செல்வ கொளஞ்சியப்பர் வள்ளி தெய்வானையை திருமாங்கல்யம் கொண்டு மணம் முடிக்கும் நிகழ்வு நடைபெற்றது .
தொடர்ந்து சுவாமிக்கு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு சுவாமியின் திரு பிரசாதம் வழங்கப்பட்டது .இதில் புவனகிரி சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமியின் திருக்கல்யாண வைபவத்தை கண்டு அருளாசி பெற்றுச் சென்றனர்.


