புவனகிரி அருகே ஈசாலவல்லி பிடாரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் கோலாகலம்!
கடலூர் மாவட்டம், புவனகிரி அருகே கஸ்பா ஆலம்பாடி பிடாரியம்மன் கோவில் தெருவில் எழுந்தருளியுள்ள ஈசாலவல்லி என்கிற பிடாரியம்மன் ஆலயத்தில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா மிக விமரிசையாக நடைபெற்றது.
விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், வாஸ்து பூஜைகளுடன் தொடங்கி, தொடர்ந்து பல்வேறு யாகசாலை பூஜைகளும், பூர்ணாஹுதி மற்றும் தீபாராதனைகளும் சிறப்பாக நடைபெற்றன.

விழாவின் முக்கிய நிகழ்வான மஹா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. இதில் புனித நீர் அடங்கிய கலசங்கள் யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்டு கடம் புறப்பட்டு புனித நீர் கலசம் கோவில் கோபுரத்தின் மேல் கொண்டு செல்லப்பட்டது.
இதன் பின்னர் மகா மந்திரங்கள் முழங்க சிவாச்சாரியார்கள்
புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகமும், அதனைத் தொடர்ந்து
சப்த கன்னிமார்களுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது
தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் அன்னதானம் வழங்கப்பட்டது .
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனின் அருளைப் பெற்றனர்.


