in , ,

விஜயகாந்த் வழியில் விஜய் வெற்றிக் கொடி நாட்டுவாரா?


Watch – YouTube Click

விஜயகாந்த் வழியில் விஜய் வெற்றிக் கொடி நாட்டுவாரா?

நடிகர் விஜய் தனது சினிமா பயணத்தில் இருந்து அரசியல் பயணத்தில் இன்று காலெடுத்து வைத்துள்ளார். அதன்படி, தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கியிருப்பது தற்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.நடிகர் விஜய் கட்சி தொடங்கியதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் திரை பிரபலங்கள் என பலர் தங்களது வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். சினிமாவிலிருந்து அரசியலுக்கு நுழைந்தோர் பலர் உண்டு. அந்த வரிசையில் தற்பொழுது நடிகர் விஜய் அரசியலில் காலெடுத்து வைத்திருப்பது அனைவரது பார்வையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.விஜய்யின் அரசியல் நுழைவு மறைந்த தேமுதிக நிறுவனர் விஜயகாந்தை நினைவுபடுத்துகிறது. அதாவது விஜயகாந்த், நடித்துக்கொண்டு இருக்கும்பொழுதே, தனது ரசிகர் மன்ற உறுப்பினர்களை நலத்திட்டப் பணிகளில் ஈடுபடுத்தி, உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வைத்து. பின்னர் தான் தேமுதிக கட்சியை அதிகாரப்பூர்வமாக தொடங்கினார்.

அந்த பாணியில் சினிமாவில் விஜயகாந்த் உதவியுடன் உயர்ந்த நடிகர் விஜய்யும், தனது ரசிகர்களை மக்கள் இயக்கத்தில் இணைத்து, நலத்திட்டப் பணிகளில் ஈடுபடுத்தினார். பின்னர் உள்ளாட்சி தேர்தலில் அவர்களை போட்டியிட செய்து, தற்போது அரசியல் கட்சியை தொடங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Watch – YouTube Click

What do you think?

குழாய் உடைந்து சாலையில் வீணாகும் குடிநீர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

விஜய்க்கு அண்ணாமலை வாழ்த்து