in ,

குழாய் உடைந்து சாலையில் வீணாகும் குடிநீர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை


Watch – YouTube Click

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் காந்தி சிலை ரவுண்டானா பகுதியில் உள்ள சாலையில் நகராட்சி குடிநீர்குழாய் உடைந்து சாலையில் வீணாகும் குடிநீர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் காந்தி சிலை ரவுண்டானா பகுதியில் நகராட்சி குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு சாலையில் வீணாக செல்லும் குடிநீர் இராஜபாளையம் பகுதியில் உள்ள 42 வார்டுகள் உள்ளது.

இராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள அய்யனார் கோவில் ஆற்றில் இருந்து வரக்கூடிய மழை நீரை ஆறாவது மைல் நீர் தேக்கத்தில் சேமித்து வைத்து இராஜபாளையத்துக்கு குடிநீர் விநியோகம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் இராஜபாளையம் காந்தி சிலை ரவுண்டானா பகுதியில் பாதாள சாக்கடை மற்றும் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்திற்காக குழாய்கள் பதிக்கும் பணிகள் நடைபெற்று முடிந்த நிலையில் ஆறாவது மை பகுதியில் இருந்து வருகின்ற குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக சாலையில் செல்கிறது. இதனால் பொதுமக்கள் சாலையில் செல்லும்போது பாதாள சாக்கடை. தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் நடைபெற்ற நிலையில் சாலையில் குண்டும் குழியமாக உள்ளது. இதனால் குடிநீர் குழாய்கள் குடிநீர் சாலையில் வீணாகி செல்கிறது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அலட்சியமாக இருப்பதால் இருசக்கர வாகன ஓட்டிகள் சிரமத்துடன் செல்கின்றனர். உடனடியாக அதிகாரிகள் சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Watch – YouTube Click

What do you think?

திருச்சியில் நடைபெறும் ICRS எனப்படும் பன்னாட்டு கருத்தரங்கம்

விஜயகாந்த் வழியில் விஜய் வெற்றிக் கொடி நாட்டுவாரா?