in

தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த 3 வழிப்பறி கொள்ளையர்கள் கைது


Watch – YouTube Click

தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த 3 வழிப்பறி கொள்ளையர்கள் கைது

 

திருச்சுழி பூமிநாதன் கோவில் அருகே தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த 3 வழிப்பறி கொள்ளையர்கள் கைது – வழக்குப்பதிவு செய்து திருச்சுழி போலீசார் விசாரணை

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி பூமிநாதன் கோவில் அருகே அதிகாலையில் வழிப்பறியில் ஈடுபட்ட 3 கொள்ளையர்களை திருச்சுழி போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

திருச்சுழி அருகே உள்ள தமிழ்பாடி பகுதியைச் சேர்ந்தவர் பாக்கியம். இவர் தனது ஊரைச் சேர்ந்த மதுரை வீரன், மணிகண்டன், மூக்கையா ஆகியோருடன் இரண்டு பைக்குகளில் அதிகாலை 4 மணி அளவில் திருச்சுழி சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், திருச்சுழி பூமிநாதன் கோவில் அருகே பாக்கியம் சென்ற பைக்கினை 3 மர்மநபர்கள் வழி மறித்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து பாக்கியம் தனது பைக்கை நிறுத்தி அவர்கள் யார்? என்று விசாரிக்க முற்பட்டபோது, அந்த 3 மர்மநபர்களும் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி பாக்கியத்திடம் இருந்த ரூ. 300 பணத்தை பறித்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பி ஓடி விட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், அதிகாலையில் நடைபெற்ற இந்த வழிப்பறி சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த பாக்கியம் உடனடியாக இந்த சம்பவம் குறித்து திருச்சுழி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதனையடுத்து, திருச்சுழி காவல் சார்பு ஆய்வாளர் வீரணன் தலைமையிலான போலீசார் குற்றவாளிகளை விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்தனர். மேலும், அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், அவர்கள் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை யைச் சேர்ந்த சூர்யா (25), கமுதி தாலுகா செய்யாமங்கலம் பகுதியைச் சேர்ந்த பூவலிங்கம்(27) மற்றும் ஹிருத்திக் ரோஷன் (19) என்பதும் தெரிய வந்தது.

மேலும் அவர்கள் மூன்று பேரும் பல்வேறு மாவட்டங்களில் வழிப்பறி உள்ளிட்ட தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.

இதனையடுத்து, வழிப்பறி குற்றவாளிகள் சூர்யா, பூவலிங்கம், ஹிருத்திக் ரோஷன் ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த திருச்சுழி போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் சிறையில் அடைத்தனர்.


Watch – YouTube Click

What do you think?

தை அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் சதுரகிரியில் சாமி தரிசனம்

அன்புமணி ராமதாஸ் இணக்கமாக உள்ள பாஜக அரசிடம் பேசி மருத்துவக் கல்லூரிகள் கேட்டு பெறலாம்