Watch – YouTube Click

ஐரோப்பிய செய்திகள்

ஸ்பெயின் பிரதமரின் ராஜினாமா முடிவை திரும்ப பெற வலியுறுத்தி ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் போராட்டம்

ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சாஞ்செஸ் மனைவி மீது ஊழல் குற்றச்சாட்டை தனியார் அமைப்பு ஒன்று முன் வைத்தது. இது தொடர்பான வழக்கின் விசாரணை
மாட்ரிட் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இதனால் பிரதமரின் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டது. எனவே அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் பிரதமரின் மனைவி மீது சுமத்தபட்ட குற்றச்சாட்டு போலியானது; அவரை இந்த வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும் என அரசு தரப்பு வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் வாதாடினர்.

இந்த வழக்கில் விரைவில் நீதிபதி தீர்ப்பு அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிற
து.

இதற்கிடையே ஸ்பெயின் பிரதமர் தனது ராஜினாமா முடிவை திரும்ப பெற வலியுறுத்தி அவரது ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் இரண்டு ஸ்பெயின் தலைநகரில் நேற்று பேரணி சென்றனர்.

 

வெளிநாட்டு கர்ப்பிணி பெண்ணை துரத்தியதாக வெளியான தகவல் போலியானது

போலந்து உள்துறை அமைச்சர் தகவல்

வெளிநாட்டு கர்ப்பிணி பெண்ணை போலந்து பல்லாரஸ் எல்லை வைத்து அந்நாட்டு மக்கள் துரத்தி அடித்ததாகவும் இதனால் பாதிக்கப்பட்ட அந்த பெண் வழியிலேயே பிரசிவித்ததாகவும் தகவல் வெளியானது.

ஆனால் இதனை மறுத்த போலந்து உள்துறை அமைச்சர் அந்தப் பெண்ணை உடனடியாக தாங்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்ததாகவும், அவரை துன்புறுத்தியதாக வெளியான தகவல் தவறானது என்றும் தெரிவித்துள்ளார்.

 

ஜெர்மனியில் சீனா, ரஷ்யாவுக்கு உளவு பார்த்த ஆறு பேர் கைது

ஜெர்மனியில் இருந்தவாறு சீனாவுக்கு உளவு பார்த்தவாறு செயல்பட்ட வலதுசாரி சிந்தனை உடைய கட்சியின் வேட்பாளருக்கு மிகவும் நெருக்கமான நபரை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில் அவரது பெயர் ஜிவான் என்பது தெரியவந்தது. ஜெர்மனியில் முக்கிய தகவல்களை திரட்டி அவர் சீனாவுக்கு விற்பனை செய்து அதன் மூலம் பெருமளவில் சம்பாதித்து இருக்கிறார்.

இது மட்டுமல்லாமல் தேச துரோக குற்றசாட்டிலும் அவர் சிக்கி இருக்கிறார். அவர் கைது செய்யப்பட்டதால் வலதுசாரி வேட்பாளரின் வெற்றி வாய்ப்பு தேர்தலில் பாதிக்கக்கூடும் என்று அரசியல் ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

மேலும் இந்த மாதத்தில் மற்றும் ஜெர்மனியில் இருந்தவாறு சீனா மற்றும் ரஷ்யாவுக்கு உளவு பார்த்ததாக ஆறு பேர் வரை கைது செய்யப்பட்டு இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

பிரிட்டனில் இருந்து அயர்லாந்து வரும் அகதிகளை மீண்டும் பிரிட்டனுக்கு அனுப்ப அயர்லாந்து முடிவு

பிரிட்டனிலிருந்து அகதிகள் ஏராளமானோர் அயர்லாந்து செல்ல படகில் பயணிக்கின்றனர். இதனால் அயர்லாந்து நாட்டுக்கு தேவையில்லாத தலைவலி ஏற்பட்டிருக்கிறது.

ஆகையால் அகதிகளை மீண்டும் பிரிட்டனுக்கு அனுப்ப அயர்லாந்து பிரதமர் சைமன் ஹாரிஸ் முடிவு செய்து இருக்கிறார். இது தொடர்பாக அவசர மசோதா ஒன்றை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு அயர்லாந்து நீதித்துறை அமைச்சருக்கு அவர் உத்தரவிட்டிருக்கிறார்.

ஏற்கனவே ரிட்டன் நோக்கி வரும் அகதிகளை ரூவாண்டா தேசத்துக்கு நாடு கடத்த பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் முடிவு செய்த நிலையில், அதற்கு எதிர் மாறாக அயர்லாந்து செயல்படுவது பிரிட்டனுக்கு தொல்லையாக அமைந்திருக்கிறது.

 

ஸ்காட்லாந்து முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய முடிவு

ஸ்காட்லாந்து இந்த முதல்வர் யூஸஃப் ஸ்காட்லாந்து கிரீன்ஸ் கட்சியுடன் கூட்டணியை கடந்த வாரம் முறித்தார். இதனால் ஸ்காட்லாந்து அரசுக்கு பெரும்பான்மை குறைந்து போனது.

எனவே இந்த வாரம்
யூஸஃப் அரசு மீது ஸ்காட்லாந்து சட்டப்பேரவையில் நம்பிக்கை இல்லா தீர்மானம் வருகிறது.

இதில் ஸ்காட்லாந்து அரசு தப்புமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

அதிலும் அரசுக்கு எதிராக இரண்டு நம்பிக்கை இல்லா தீர்மானங்கள் வர இருப்பதால் ஸ்காட்லாந்து முதல்வர் கடும் அதிருப்தியில் இருக்கிறார்.

ஒருவேளை நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெற்று தான் முதல்வர் பதவியில் இருந்து விலகுவதை தவிர்த்து தானாகவே முன்வந்து பதவியை ராஜினாமா செய்து விடலாம் என்று அவர் யோசித்து வருவதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

பிரிட்டனில் தொலைத்தொடர்பு சாதனங்களை வடிவமைக்கும் போது கடுமையான விதிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தல்

செல்போன், தொலைக்காட்சி உள்ளிட்ட பல்வேறு தகவல் தொடர்பு சாதனங்களில் உளவு பார்க்கும் கருவிகள் தற்போது மறைமுகமாக பொருத்தப்படுவதால் பொதுமக்களின் அந்தரங்க உரிமைகள் மீறப்படுகின்றன.

மேலும் முக்கியத்துவம் வாய்ந்த தகவல்கள் பிற நாடுகளுக்கு பகிரப்படுவதால் இது போன்ற தகவல் தொடர்பு சாதனங்களை வடிவமைக்கும் நிறுவனங்கள், மிகவும் கட்டுப்பாட்டுடனும், உளவு பார்க்கும் கருவிகள் பொருத்தப்படாத வகையில் செயல்பட வேண்டும் என்றும் பிரிட்டன் அரசு வலியுறுத்தி அதற்கான சட்டம் இயற்றி உள்ளது


Watch – YouTube Click