in

முந்திரி பருப்பு கடையை அபகரித்த மாணவன் உடந்தையாக இருந்த ஆய்வாளரைக கண்டித்து போராட்டம்


Watch – YouTube Click

முந்திரி பருப்பு கடையை அபகரித்த மாணவன் உடந்தையாக இருந்த ஆய்வாளரைக கண்டித்து போராட்டம்

 

முந்திரி பருப்பு கடையை பார்த்து கொள்ள ஆசிரியர் முன்னாள் மாணவனை வேலைக்கு அமர்த்திய விவகாரம். கடை தன்னுடைய பெயருக்கு மாற்றி ஏமாற்றியதால் சமூக அமைப்புகள் உடந்தையாக இருந்த ஆய்வாளரை கண்டித்து காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம்..

புதுச்சேரி ஓர்லயன்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஜனாபாய் (வயது68) இவர் காந்தி வீதியில் TKT CASHEWŞ என்ற பெயரில் முந்திரி பருப்பு வியாபாரம் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக கடை நடத்தி வருகின்றார். இவரது கணவர் முருகேசன் (வயது 78) மோதிலால் நேரு அரசுப் பாலிடெக்னிக் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி ஓய்வுப் பெற்றவர். இவருக்கு இரண்டு கைகளும் செயலிழந்து மற்றவர் உதவியோடு வாழ்ந்து வருபவர். இவர்களுக்கு மூன்று பெண் பிள்ளைகள் உள்ளனர். இதில் ஒருவர் ஆசிரியையாகவும், மற்ற இருவர் லண்டனிலும் வசித்து வருகின்றனர்.

வயது முதிர்ந்த காரணத்தால் ஜனாபாய், முருகேசன் இருவரும் பார்த்துக் கொள்ள முடியாததால் முதலியார்பேட்டையைச் சேர்ந்த ம முருகேசன் முன்னாள் மாணவன் கோகுல் என்பவரை சம்பளத்திற்கு வேலைக்கு வைத்து கடையை நடந்தி வந்துள்ளனர். கடையை யாரும் கண்டுகொள்ளாததால் இந்த சம்பவத்தை பயன்படுத்தி கோகுல் முந்திரி பருப்புக் கடையை அபகரிக்க சதித் திட்டம் தீட்டியுள்ளார். கடையின் உரிமையாளர் ஜனாபாய் கையெழுத்தைப் போட்டு ஒரு போலிப் பங்குதாரர் பத்திரம் Partnership Deed தயாரித்துள்ளார். அந்தப் பத்திரத்தைக் கம்பெனி பதிவாளர் அலுவலகத்தில் Registrar of Companies-ல் பதிவும் செய்துள்ளார்.

இதில் கடை உரிமையாளருக்கு ரூ.15 இலட்சம் ரூபாய் கொடுத்ததாகவும், வரும் லாபத்தில் 80% கோகுலுக்கும், மீதி 20% ஜனாபாய்க்கும் சேர வேண்டும் என்றும் அப்போலிப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார். ஆனால், ரூ. 15 இலட்சம் பணம் கொடுக்கவும் இல்லை. கொடுத்ததற்கான எந்தவித ஆதாரமும் இல்லை. கடையின் உரிமையாளர் இறந்துவிட்டால் கடை முழுவதும் தனக்கே சொந்தம் என்றும் போலிப் பத்திரத்தில் எழுதியுள்ளார். இதனை அறிந்த ஜனாபாயின் மகள்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர் ஆனால் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் சமூக அமைப்புகளிடம் இது குறித்து தெரிவித்துள்ளனர்..

அதன் அடிப்படையில் போலி பங்குதாரர் பத்திரம் தயாரித்து காந்திவீதியில் உள்ள முந்திரிபருப்பு கடையை அபகரித்த குற்றவாளியை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். குற்றவாளிக்கு துணைபோகும் பெரியகடை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி புதுச்சேரி சமூக ஜனநாயக இயக்கங்கள் சார்பில் இன்று பெரியகடை காவல்நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தனர்.

இதற்காக நேருவீதி, கேன்டீன் வீதி சந்திப்பில் ஒன்றுகூடினர். தமிழர்களம் அழகர் தலைமை வகித்தார். திராவிடர் விடுதலை கழகம் லோகுஅய்யப்பன் முன்னிலை வகித்தார். மக்கள் உரிமை கூட்டமைப்பு சுகுமாரன், மக்கள் வாழ்வுரிமை இயக்கம் ஜெகநாதன், தந்தைபெரியார் திராவிடர் கழகம் வீரமோகன், திராவிடர் கழகம் சிவவீரமணி, தமிழக வாழ்வரிமை கட்சி ஸ்ரீதர், நுகர்வோர் பாதுகாப்பு இயக்கம் முருகானந்தம், மாணவர் கூட்டமைப்பு சுவாமிநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.

அங்கிருந்து அவர்கள் ஊர்வலமாக பெரியகடை காவல்நிலையம் நோக்கி சென்றனர். அவர்களை போலீசார் பேரிகார்டு அமைத்து தடுத்தனர். அப்போது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டு சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது. அதனைத் தொடர்ந்து போலீசாரின் பேரிகார்டுகளை தள்ளிவிட்டு பெரியகடை காவல்நிலையம் நோக்கி சென்றனர். அங்கு காவல்நிலையத்தை முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர். 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்…


Watch – YouTube Click

What do you think?

கொடைக்கானல் பூம்பாறை குழந்தை வேலப்பர் கோவில் திருத்தேரோட்டம்

தென்காசி 4 வழிச்சாலையில் புதிய சுங்கச்சாவடி கடைகள் அடைத்து போராட்டம்