in

வாகனத்தில் வீதி வீதியாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு


Watch – YouTube Click

வாகனத்தில் வீதி வீதியாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு

 

மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பாபுவை ஆதரித்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தஞ்சை கிழக்கு மாவட்ட கழகச் செயலாளருமான ஆர் கே பாரதி மோகன் திருப்பனந்தாள் ஒன்றியத்தில் திறந்த வாகனத்தில் வீதி வீதியாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு.

மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பாபு திருப்பனந்தாள் ஒன்றித்துக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டார். அவருக்கு ஆதரவாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தஞ்சை கிழக்கு மாவட்ட கழக செயலாளருமான ஆர் கே பாரதி மோகன் திறந்த ஜீப்பில் வீதி வீதியாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இதனை தொடர்ந்துஇடையாநல்லூரில் அமைந்துள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போட வரும் வாடிக்கையாளர்களுக்கு அதிமுக சார்பில் போட்டியிடும் பாபு அவர்கள் வரும் வாடிக்கையாளர்கள் பெட்ரோல் போட்டு வாக்கு சேகரித்தார்.

அதனைத் தொடர்ந்து ஆயி அதிமுக கட்சியின்வீரா கண் கலியமூர்த்தி இல்ல திருமண விழாவில் பங்கேற்று மணவிழா காணும் மணமக்களை ஆசீர்வதித்து மணமக்களோடுதனியார் திருமண மண்டபத்தில் உணவு அருந்தினார்.

அதனைத் தொடர்ந்து திருப்பனந்தாள் தெற்கு மற்றும் வடக்கு ஒன்றிய பகுதிகளான கீழ சூரியமூலை, முள்ளுக்குடி, வேலூர், கதிராமங்கலம், மகாராஜபுரம் உள்ளிட்ட உட்பட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதில்அதிமுக கழக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.


Watch – YouTube Click

What do you think?

பிரேமாலதா விஜயகாந்த் சிவகாசியில் பேச்சு

கைத்தறி நெசவு நெய்து நெசவாளர்களிடம் நூதன முறையில் வாக்கு சேகரிப்பு