in

கைத்தறி நெசவு நெய்து நெசவாளர்களிடம் நூதன முறையில் வாக்கு சேகரிப்பு


Watch – YouTube Click

கைத்தறி நெசவு நெய்து நெசவாளர்களிடம் நூதன முறையில் வாக்கு சேகரிப்பு

 

கரூர் பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் தங்கவேலை ஆதரித்து முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட அதிமுக செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொகுதி முழுவதும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

பிரச்சாரம் முடிவடைய இன்னும் ஒரு சில தினங்களே உள்ள நிலையில், இன்று கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கோதூர், வேலுச்சாமிபுரம், திருக்காம்புலியூர், வெங்கமேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றது.

கோதூர் பகுதியில் உள்ள விநாயகர் கோவிலில் சாமி தரிசனம் செய்த வேட்பாளர் தங்கவேல் அப்பகுதி பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். அப்போது பெண்கள் ஆரத்தி எடுத்து அவருக்கு வரவேற்பு அளித்தனர்.

அதனை தொடர்ந்து வெங்கமேடு, திட்ட சாலை பகுதியில் அமைந்துள்ள கைத்தறி ஆலையில் நெசவு செய்து, வேட்பாளர் தங்கவேல் நூதன முறையில் நெசவாளர்களிடம் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

தொடர்ந்து வெங்கமேடு பகுதியில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு வேட்பாளர் தங்கவேலை இருசக்கர வாகனத்தில் அமர வைத்து, முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பொதுமக்களை சந்தித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.


Watch – YouTube Click

What do you think?

வாகனத்தில் வீதி வீதியாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு

மீன்பிடி தடைக்காலம் இன்று தொடங்கியது