பாக்ஸ் ஆபீஸில் கடும் போட்டி! ஒரே நாளில் வெளியாகும் 9 புதிய திரைப்படங்கள்!
இந்த வாரம் திரையரங்குகளில் ரசிகர்களுக்கு செம விருந்து காத்திருக்கிறது. தனுஷ் – மம்மூட்டி இணைந்து நடித்துள்ள ‘O.M Chapter 1’ திரைப்படம் முதல் துல்கர் சல்மானின் ‘Aakasamlo Oka Tara’ வரை பல மொழிகளைச் சேர்ந்த திரைப்படங்கள் வெளியாக உள்ளன.
ஆக்ஷன், காதல், காமெடி, சென்டிமென்ட், திரில்லர் என அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் இந்தப் படங்கள் உருவாகியுள்ளன. குறிப்பாக முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் ஒரே நாளில் வெளியாக இருப்பதால், தியேட்டர்களில் ரசிகர்களின் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகும் இந்தத் திரைப்படங்களில் ரசிகர்களின் கவனத்தை அதிகம் ஈர்க்கப்போகும் படம் எது? முதல் நாளிலேயே எந்தப் படம் பாக்ஸ் ஆபீஸில் ஆதிக்கம் செலுத்தப்போகிறது? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
அதேபோல் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள ‘அப்பா குட்டி’ திரைப்படம் தந்தை – மகள் பாசத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகும் ‘சத்யவான் சாவித்திரி’ திரைப்படமும் இந்த வார வெளியீடுகளில் கவனம் பெற்றுள்ளது.


