in

நவீன ட்ரோன் கேமரா மூலம் வனத்துறையினர் ஆய்வு


Watch – YouTube Click

நவீன ட்ரோன் கேமரா மூலம் வனத்துறையினர் ஆய்வு

 

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை பகுதியில் புகுந்த சிறுத்தை புலி வனத்துறையினரால் தேடப்பட்டு வரும் நிலையில், ஆரோக்கியநாதபுரம் கருவை காட்டில் பதுங்கி இருப்பதாக கண்டறியப்பட்டது.

அங்கு, கேமராக்கள் பொருத்தப்பட்டு, சிறுத்தையை பிடிக்க கூண்டு அமைக்கப்பட்டது. ஆனால் அந்த சிறுத்தை புலி அங்கிருந்து தப்பி அருகில் உள்ள சித்தர்காடு பகுதியில் உள்ள தண்டபானி தெருவில் புகுந்து காவிரி ஆற்று கரையோரம் ஒரு ஆட்டை கடித்து கொன்றதாக கூறப்படுகிறது.

அதனையொட்டி வனத்துறையினர் அந்த இறந்த ஆட்டை பார்வையிட்டு மருத்துவ குழுவை கொண்டு, ஆய்வு செய்தனர். இதனால் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உயிரிழந்த ஆட்டின் சடலத்தை வனத்துறையினர் கைப்பற்றி கால்நடை துறையினரின் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து வனத்துறையின் சார்பில் திருச்சி மண்டல தலைமை வன அலுவலர் சதீஷ் மற்றும் மாவட்ட வனத்துறை அதிகாரி அபிஷேக் டோமர் ஆகியோர் சம்பவ இடத்தில் முகாம் இட்டு சிறுத்தை புலி பிடிப்பதற்கான முன்னேற்பாடுகளை செய்து வருகின்றனர். உடல் வெப்பநிலையை வைத்து சிறுத்தை புலி கண்டறியும் அதி நவீன ட்ரோன் கேமரா மூலம் சித்தர் காடு மறையூர் மஞ்சளாறு கரை பகுதிகள் ஆகியவற்றில் வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுத்தை புலி ஆட்டை அடித்துக் கொன்றதாக கூறப்படும் சித்தர் காடு பகுதியில் பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி உள்ளனர். பொதுமக்கள் அச்சத்துடன் காணப்படும் நிலையில் விரைந்து சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Watch – YouTube Click

What do you think?

விஜயகாந்தின் 100-வது நாள் சமாதிக்கு கூட செல்லாமல் வாக்கு கேட்ட விஜய்பிரபாகரன்

செஞ்சி வாரச் சந்தையில் ரம்ஜான் பண்டிகையையொட்டி ரூ 3 கோடி ரூபாய் வரை ஆடுகள் விற்பனை