in

அருள்மிகு கங்காளாமூர்த்தி சுவாமி 179 -வது ஆண்டு நாடகவிழா


Watch – YouTube Click

அருள்மிகு கங்காளாமூர்த்தி சுவாமி 179 -வது ஆண்டு நாடகவிழா

தஞ்சாவூர் புன்னைநல்லூர் மாரியம்மன்கோயில், குருவப்ப நாயக்கர் தெருவில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு கங்காளாமூர்த்தி சுவாமி 179 -வது ஆண்டு நாடகவிழா.

அருள்மிகு புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் சன்னதியின் எதிரே உள்ள நாடக மேடையில் இரவு 10 மணிக்கு மேல் காலை 6:00 மணி வரை இரண்டு நாள் இரவு நாடக விழா தொடர்ந்து.

இன்று முதல் நாள் குரோதி ஆண்டு சித்திரைத்திங்கள் மே மாதம் 6-தேதி திங்கட்கிழமை இரவு நாடகவிழா ஸ்ரீ ரெங்கநாத உபாத்தியார் அருளிய ஸ்ரீ சிறுதொண்டர் நாயனார் இசை, நாட்டிய, நாடகம் நடைபெற்றது, இந்நாடகத்தில்
முருகன், விநாயகர், ஐயர், ராஜா, சிப்பாய், ஆண் பெண் வேடத்திலும் பாரம்பரியமாக இந்நாடக விழா ஆனது நடைபெற்று வருகிறது.

முதல் பகுதியாக தொடங்கி இரண்டாம் நாள் மதியம் அருள்மிகு கங்காளநாத சுவாமிக்கு அப்பர் மடத்தில் அமுதுபடையல் வைக்கப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இவ்விழாவில் குழந்தை இல்லாத தம்பதியர்கள் மதிய நேரம் பக்தர்கள் சாப்பிட இருக்கும் அன்னத்தை குழந்தை பாக்கியம் வேண்டி அவர்களிடம் மடியந்தி அன்னத்தை வாங்கி தாங்கள் சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம் என்பதால் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானமும் செய்யப்பட்டன. இவ்விழாவானது ஆண்டுதோறும் புன்னைநல்லூர் மாரியம்மன்கோயில் கிராமவாசிகள் செய்து வருகின்றனர்.


Watch – YouTube Click

What do you think?

எதிர்க்கட்சிகளை முடக்குவதற்காகன வேலையை பாஜக அரசு செய்து வருகிறது

சேவைகள் துறையில் இந்தியா முதலிடம்