in

ஊட்டியில் மண் சரிவு 7 பேர் உயிரிழப்பு


Watch – YouTube Click

ஊட்டியில் மண் சரிவு 7 பேர் உயிரிழப்பு

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே, காந்தி நகர் பகுதியில் லவ்டேல் செல்லும் சாலையில் சுமார் ஒரு வருடத்திற்கு மேலாக அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வந்துள்ளது.

இந்த அடுக்குமாடு குடியிருப்பு சுற்றி தடுப்பு சுவர் அமைக்கும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்துள்ளது. சுமார் 15 அடிக்கு மேலான உயரத்தில் தடுப்பு சுவரானது அமைக்க கட்டுமான பணிகள் நடைபெற்று வந்துள்ளது. அந்த கட்டிடத்திற்கு பின்புறம் நகராட்சி கழிப்பிடம் ஒன்று செயல்படாமல் இருந்துள்ளது.

இந்நிலையில், கட்டுமான பணியின் போது பின்னால் செயல்படாத நகராட்சி கழிப்பிடம் இருப்பது தெரியாமல், அங்கு கட்டுமான பணி மேற்கொண்டதாக தெரிகிறது. இதன் காரணமாக அங்கு மண் சரிவு ஏற்பட்டு கட்டுமான தொழிலாளர்கள் உள்ளே சிக்கிக்கொண்டனர்.

இந்தமண் சரிவில் சிக்கி இதுவரை 7 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் கிடைத்துள்ளன. மேலும் மீட்கப்பட்ட ஐந்துக்கும் மேற்பட்டோர் உதகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.

மேலும், மண்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மீட்புப்படையினர் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். இந்த மண்சரிவு எப்படி ஏற்பட்டது என உரிய காரணத்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


Watch – YouTube Click

What do you think?

சிவகங்கை மாவட்டத்திற்கு முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் வருவதை கண்டித்து சுவரொட்டிகள்

சாட்டை துரைமுருகனிடம் என்ஐஏ விசாரணை