in

சித்ரா பௌர்ணமி முன்னிட்டு சதுரகிரியில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்


Watch – YouTube Click

சித்ரா பௌர்ணமி முன்னிட்டு சதுரகிரியில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்

 

விருதுநகர் மாவட்டம் ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே சித்ரா பௌர்ணமி முன்னிட்டு சதுரகிரியில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் .

வத்திராயிருப்ப அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில்.

இந்த கோவிலுக்கு ஒவ்வொரு மாதமும் பிரதோஷம் அமாவாசை பௌர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்கள் மட்டுமே பக்தர்கள் மலையேறி செல்ல வனத்துறையின் சார்பில் அனுமதி என்பது வழங்கப்பட்டு வருகிறது.

பிரதோஷம் மற்றும் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய கடந்த 21ஆம் தேதி முதல் நாளை வரை நான்கு நாட்கள் வனத்துறை சார்பில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இன்று சித்ரா பௌர்ணமி முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை புரிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதல் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

தாணிப்பாறை அடிவாரப் பகுதியில் மொட்டை எடுத்து தங்களின் நேற்றிக் கடனை செலுத்தினர். தடை செய்யப்பட்ட பொருட்களை பக்தர்கள் கொண்டு செல்கின்றனர் என வனத்துறையினர் தீவிர சோதனைக்கு பின்னரே பக்தர்கள் மலையேற அனுமதி.

பிளாஸ்டிக் உள்ளிட்ட எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டு சென்றால் கடும் நடவடிக்கை என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


Watch – YouTube Click

What do you think?

அரசுப்பணியாளர்களுக்கு படித் தொகையை உயர்த்தி புதுச்சேரி நிதித்துறை உத்தரவிட்டுள்ளது

கோலாகலமாக நடந்த அபர்ணா தாஸ் – தீபக் பரம்போல் திருமணம்