in

அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் பேராசிரியர் நிர்மலா தேவி


Watch – YouTube Click

அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் பேராசிரியர் நிர்மலா தேவி நீதிமன்றத்தில் ஆஜராகததால் வழக்கு வரும் 29ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் பேராசிரியர் நிர்மலாதேவியை கடந்த 2018 ம் ஆண்டு ஏப்ரல் 16ம் தேதி கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்ட சிபிசிஐடி போலீசார் வழக்கில் தொடர்புடைய மதுரை காமராஜர் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் முருகன் , ஆராய்ச்சி மாணவர் கருப்புசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர்
11 மாத சிறைவாசத்திற்கு பின் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின்படி நிபந்தனை ஜாமினில் வெளிவந்துள்ள பேராசிரியர் நிர்மலா தேவி
மற்றும் டெல்லி உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் நிபந்தனை ஜாமினில் வெளி வந்துள்ள உதவிப் பேராசிரியர் முருகன் முன்னாள் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் மீதான வழக்கு விருதுநகர் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது .

கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்தும் வகையில் செல்போனில் பேசியதாக அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி, மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோர் மீது கடந்த 2018ம் ஆண்டு அருப்புக்கோட்டை நகர் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். அதன்பின் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்டது.

வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு நீதிபதி பகவதி அம்மாள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.பின்பு மூவர் மீதும் 1360 பக்க குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டது.

100 க்கும் மேற்பட்ட சாட்சிகள் விசாரணை மற்றும் இருதரப்பு வாதங்கள், விசாரணை நிறைவு பெற்றது.

இந்த வழக்கில் பலர்மீது குற்றச்சாட்டுகளும், பல்வேறு சந்தேகங்களும் எழுந்த நிலையில், கடைசியில் நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி ஆகியோர் மட்டும்தான் குற்றவாளிகள் என இறுதிசெய்து குற்றப்பத்திரிகையை சி.பி.சி.ஐ.டி  நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.

3 பேருக்கும் எதிராக, பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம், விபசார தடுப்புச் சட்டம், தொழில்நுட்பத்தைத் தவறாக பயன்படுத்திய பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தப்பட்டதாக குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டது.கொரோனா ஊரடங்கால் விசாரணை தாமாதமானது.

அனைத்துச் சாட்சிகளும் விசாரிக்கப்பட்ட நிலையில் இன்று
ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகிலா விரைவு நீதிமன்றம் தீர்ப்பு அளிக்க இருந்த நிலையில் பேராசிரியர் நிர்மலா தேவி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை .
முருகன் மற்றும் கருப்புசாமி மட்டுமே நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில் வழக்கு வரும் 29ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். 29ஆம் தேதி நிர்மலா தேவி உட்பட 3 பேரும் கட்டாயம் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.


Watch – YouTube Click

What do you think?

காவலர்கள் நீர் மோர் பந்தல் அமைத்து பொதுமக்களுக்கு வழங்கினார்கள்

அமைச்சர் கமலக்கண்ணன் மூட்டை தூக்கும் வீடியோ காட்சி பரவி வருகிறது