in

சாலைகள் குறித்து புகார் அளித்தால் 48 மணி நேரத்தில் (அ) 72 மணி நேரத்தில் சரி செய்யப்படும்


Watch – YouTube Click

சாலைகள் குறித்து புகார் அளித்தால் 48 மணி நேரத்தில் (அ) 72 மணி நேரத்தில் சரி செய்யப்படும்

 

கடலூரில் இன்று மாவட்ட ஆட்சியர் DR. அருண் தம்புராஜ் முன்னிலையில் புதியதாக கட்டப்பட்டு உள்ள 4 கோடியே 43 லட்சத்து 35 ஆயிரம் மதிப்பிலான பொது பணி துறை கோட்ட அலுவலகம் மற்றும் பிரிவு அலுவலக கட்டிட திறப்பு விழாவில் அமைச்சர்கள் எ.வ வேலு KN நேரு MRK பன்னீர்செல்வம் வை.கணேசன்
மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி மேயர் துணை மேயர் ஆகியோர் பங்கேற்ற விழாவில் புதிய கட்டிடத்தை பொதுப்பணி துறை அமைச்சர் எ.வவேலு மற்றும் முத்த அமைச்சர்கள் பங்கேற்று கலைஞர் அவர்கள் திரு உருவ படத்திற்கு மலர்துவி பின்பு குத்து விளக்கு ஏற்றி 4 கோடியே 43 லட்சத்து 38 ஆயிரம் மதிப்பிலான புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார்.

மாவட்ட ஆட்சியர் DR. அருண் தம்புராஜ் அமைச்சர் பெருமக்கள் முன்னிலையில்
வரவேற்பு உரையாற்றினார்.

அதன் பின்னர் பொதுப்பணித்துறை அமைச்சர் ஏவா வேலு அவர்கள் பேசுகையில்
கலைஞர் காலத்தில் உருவாக்கப்பட்டது தான் கட்டமைப்பு வசதிகள் என்றும் ஒரு மாநிலத்தின் வளர்ச்சி ஆனது மூலதனத்தை உருவாக்கினால் மட்டுமே அந்த மாநிலம் பொருளாதாரத்தில் வளர்ச்சி பெறும் என்று கூறினார்.

இது கலைஞர் காலத்தில் உருவாக்கினார் இன்று அவர்கள் வழியில் வந்த தமிழக முதல்வரும் அதை உருவாக்கியுள்ளார் இந்த மூல தான கட்டமைப்பை உருவாக்குவதன் மூலம் பல்வேறு வளர்ச்சி பணிகளையும் நம்மால் உருவாக்க முடியும் நிதி துறை செயல்பாட்டால் மக்கள் வளர்ச்சி பணிக்கும் செலவிடப்படும் என பெருமைபட கூறினார்.

விழா பேருரைக்கு பின்னர் 335 பயனாளிகளுக்கு 4 கோடியே 37 இலட்சத்து 81 ஆயிரத்து 485 ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களை பயனாளிகளுக்கு அமைச்சர்
பெருமக்கள் வழங்கினார்கள்.

பின்னர் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அமைச்சர் ஏ.வ வேலு அவர்கள் சாலைகள் செப்பனிடபடாமல் உள்ளதை சுட்டிகாட்டியதற்கு தற்போது சாலைகள் பழுதடைந்து இருந்தால் தற்போது நம்ம சாலை என்ற புதிய செயலி துவக்கப்பட்டு உள்ளதாகவும் அதில் புகார் அளித்தால் 48 மணி நேரத்தில் (அ) 72 மணி நேரத்தில் சரி செய்யப்படும் என பொது பணி துறை அமைச்சர் ஏ. வ.வேலு கூறினார்.


Watch – YouTube Click

What do you think?

பாஜக விற்கு சவால் விட்ட MP கனிமொழி பூஜ்ஜியத்தை காட்டி துரத்த வேண்டும்

கரூரில் போலியோ சொட்டு மருந்து முகாம் தொடக்கம்