in

கரூரில் போலியோ சொட்டு மருந்து முகாம் தொடக்கம்


Watch – YouTube Click

கரூரில் போலியோ சொட்டு மருந்து முகாம் தொடக்கம்

 

கரூரில் குழந்தைகளுக்கான போலியோ சொட்டு மருந்து மாவட்டம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 831 மையங்களில் 3 ஆயிரத்து 417 பணியாளர்கள் மூலம் 74, 954 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.

கரூர் மாவட்டத்தில் இந்த திட்டத்தை செயல்படுத்தும் விதமாக கரூர் மாநகராட்சியில் 91 மையங்களும், குளித்தலை 13 மையங்களும், பேரூராட்சி மற்றும் கிராமப்புறங்களில் 724மையங்களும், 3 நடமாடும் மருத்துவக் குழு என மாவட்டம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 831மையங்களில் பிறந்த குழந்தை முதல் 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெறுகிறது.

கரூர் மாநகராட்சி பேருந்து நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் போலியோ சொட்டு மருந்து முகாம் தொடங்கப்பட்டது.

முதற்கட்டமாக இன்று தொடங்கப்பட்ட போலியோ சொட்டு மருந்து முகாம் மாலை 5 மணி வரை முகாமில் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Watch – YouTube Click

What do you think?

சாலைகள் குறித்து புகார் அளித்தால் 48 மணி நேரத்தில் (அ) 72 மணி நேரத்தில் சரி செய்யப்படும்

தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் DGP நேரில் பாராட்டு