in

நெல்லையப்பர் திருக்கோவிலில் பங்குனி உத்திரத் திருவிழாமற்றும் வரலாற்று திருவிளையாடல் நிகழ்ச்சி


Watch – YouTube Click

நெல்லையப்பர் திருக்கோவிலில் பங்குனி உத்திரத் திருவிழாமற்றும் வரலாற்று திருவிளையாடல் நிகழ்ச்சி

 

நெல்லை அருள்மிகு சுவாமி நெல்லையப்பர் திருக்கோவிலில் பங்குனி உத்திரத் திருவிழாவின் நான்காம் நாள் சுவாமி நெல்லையப்பர் வேணு வனத்தில் சுயம்புவாக தோன்றிய வரலாற்று திருவிளையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை மாவட்டம் அருள்மிகு நெல்லையப்பர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 15ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

10 நாள் நடைபெறும் இந்த திருவிழாவில் காலை மாலை சுவாமி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகளும் மகா தீபாராதனை நடைபெற்று வருகிறது.

நான்காம் நாளான இன்று நெல்லையப்பர் வேணு வனத்தில் சுயம்புவாக அவதரித்த திருவிளையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்காக முழுதும் கண்ட ராம கோன் கோன் வெள்ளி கலையத்துடன் அரன்மனைக்கு பால் எடுத்து செல்லும் நிகழ்வும் கால் இடறி மூங்கில் முகட்டில் பால்கொட்டும் நிகழ்வும் நடைபெற்றது.

தொடர்ந்து ஒரே இடத்தில் இருக்கும் மூங்கில் முகட்டில் கால் இடறி பால் கொட்டி வந்துள்ளது இதனை தொடர்ந்து இது குறித்து தகவலை அரசருக்கு தெரிவிக்க பணியாட்கள் மூலம் மூங்கில் முகத்தை வெட்ட அரசர் உத்தரவிட்டார்.

தொடர்ந்து அரண்மனை பணியாட்கள் மூங்கில் முகட்டை வெட்ட இரத்தம் பீரிட்டு வந்தது இந்த தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு வந் பாண்டிய மன்னருக்கு சுவாமி நெல்லையப்பர் சுயம்புவாக காட்சியளித்தார்.

இந்த வரலாற்று திருவிளையாடல் நிகழ்வு சுவாமி சன்னதி உட்பிரகாரத்தில் தாமிரசபை மண்டபம் அருகே அமைந்திருக்கு ஸ்தலவிருட்சத்தில் நடைபெற்றது.

தொடர்ந்து மூங்கில் முகட்டும் முன்பு அமைக்கப்பட்டுள்ள சிவலிங்கத்திற்கு சிறப்பு அபிஷேகமும் மகா தீபாராதனையும் நடைபெற்றது இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.

பங்குனி உத்திர நான்காம் திருநாளான இன்று இரவு சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் வெள்ளி ரிஷப வாகனத்தில் திருவீதி உலாவும் நடைபெறுகிறது.


Watch – YouTube Click

What do you think?

மாவட்ட தேர்தல் அலுவலருமான கார்த்திகேயன் தலைமையில் ஆலோசனை கூட்டம்

பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு வெள்ளி பூத வாகனம்