in

முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் சமச்சீர் கல்வியை கொண்டு வந்தவர் அமைச்சர் சேகர்பாபு புகழாரம்


Watch – YouTube Click

முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் சமச்சீர் கல்வியை கொண்டு வந்தவர் அமைச்சர் சேகர்பாபு புகழாரம்

தமிழக முதல்வர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் சமச்சீர் கல்வியை கொண்டு வந்தவர் மனித வாழ்க்கையில் ஏற்றத்தாழ்வு இல்லாமல்
இருக்க கருவறை முதல் கல்லறை வரை ஒரே நிலை வேண்டி அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்பதை முத்தமிழறிஞர் கலைஞர் என்று புகழாரம்
கடலூரில் இந்து சமயம் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் கலைஞர் நூற்றாண்டு விழாவில் பேச்சு

கடலூரில் இன்று திருப்பாதிரிப்புலியூரில் உள்ள புனித வளனார் மேல்நிலைப் பள்ளியில் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு
இந்து அறநிலையத்துறை அமைச்சர் திரு சேகர் பாபு அவர்கள் விழா பேருரை ஆற்றினார்கள் இந்நிகழ்ச்சியில் பிரபல இசையமைப்பாளர் பரத்வாஜ் குழுவினரின் கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது

கடலூர் மாவட்ட ஆட்சியர் திரு அருண் தம்புராஜ் அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற விழாவில் தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தலமையில் இவ்விழா காலை முதலே தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் மாலையில் நடைபெற்ற நிறைவுவிழாவில்
திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் வை கணேசன் அவர்களும்
இந்து சமயம் அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்களும்கலந்து சிறப்பித்தனர்

இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் கோஐயப்பன் மாநகராட்சி மேயர் திருமதி சுந்தரி ராஜா அவர்களும் பங்கேற்றனர் விழாவில் பேசிய வேளாண் மற்றும் உழவன் நலத்துறை அமைச்சர் அவர்கள் கலைஞரின் சாதனைகளையும் இலவச மிதிவண்டி மற்றும் கணணி போன்றவைகளை வழங்கிமாணவர்கள் படிப்பறிவில் உயர்த்தியவர் என்றார் விழாவில் சிறப்புரை ஆற்றிய இந்து சமயம் மற்றும்
அறநிலையத்துறை அமைச்சர் திரு சேகர் பாபு அவர்கள் விழா பேருரை ஆற்றுகையில் முத்தமிழ் கலைஞர் அவர்கள் சமச்சீர் கல்வியை கொண்டு வந்தவர் என்றும் மனித வாழ்க்கையில் ஏற்றத்தாழ்வு இல்லாமல் அகற்றப்பட வேண்டும் என்பதற்காக கருவறை முதல் கல்லறை வரை ஒரே நிலை மாற வேண்டி அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற உன்னத திட்டத்தை நிறைவேற்றியவர் கலைஞர் அவர்கள் என்றும் தமிழர்கள் இசைப்பள்ளி பாராயணம் பள்ளி ஓதுவார் பயிற்சி பள்ளி என அனைத்து துறைகளிலும்அனைவரும் வரலாம்
என்ற பெருமையை உருவாக்கியவர் கலைஞர் அவர்கள் இப்படி மங்காத புகழ் கொண்ட கலைஞரின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைவதாக இந்து சமயம் அறநிலைத்துறை அமைச்சர் அவர்கள் புகழாரம் சுற்றினார்

விழாவில்அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் மாணிக்கவாசகன் மற்றும் கடலூர் காவல் துறை கண்காணிப்பாளர் ராஜராம் அவர்களும் பங்கேற்றனர் நிறைவு விழாவில் இசையமைப்பாளர் பரத்ராஜ் குழுவினரின் கலை நிகழ்ச்சிகளையும் பார்வையாளர்கள் மற்றும் அமைச்சர் பெருமக்கள் கண்டு ரசித்தனர்


Watch – YouTube Click

What do you think?

10 வயது சிறுவன் எழுதிய ஹியூமனிட்டி வின்ஸ் புத்தகம்

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் கிடைத்ததாக போலியான கையெழுத்திட்ட அதிகாரிகள்