in

வேப்பூர் அருகே பள்ளி செல்லும் நேரத்தில் கூடுதல் பேருந்து வசதி இல்லாததால் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் 

வேப்பூர் அருகே பள்ளி செல்லும் நேரத்தில் கூடுதல் பேருந்து வசதி இல்லாததால் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் 

நாள்தோறும் மாணவர்கள் கூடுதல் பேருந்து வசதி இல்லாததால் ஆபத்தான நிலையில் பயணம் செய்வதாக பெற்றோர்கள் குற்றச்சாட்டு

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள பனையாந்தூர் கிராமத்திலிருந்து TN32N4366 மற்றும்TN.21N1722 என்ற பதிவன் கொண்ட அரசு பேருந்து

பனையாந்தூர் வள்ளி மதுரம் ஒரங்கூர் பட்டாகுறிச்சி உள்ளிட்ட கிராமங்களில் இருந்து பள்ளி மாணவர்களை ஏற்றுக்கொண்டு ராமநத்தம் திட்டக்குடி உள்ளிட்ட நகரங்களுக்கு மாணவர்களை விட்டுச் செல்லும்.

பள்ளி செல்லும் நேரத்தில் கூடுதல் பேருந்து வசதி இல்லாததால் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் நாள்தோறும் படிக்கட்டில் ஆபத்தான முறையில் பயணம் செய்வதாக பெற்றோர்கள் புகார் தெரிவித்துள்ளனர் தற்போது இது சம்பந்தமான வீடியோவும் வெளியாகி உள்ளது

குறிப்பாக பள்ளி செல்லும் நேரத்தில் கூடுதல் பேருந்து வசதி கேட்டு பலமுறை மனுக்கள் கொடுத்ததாகவும் ஆனால் தற்போது வரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது

மாணவர்களின் பாதுகாப்பிற்காக போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆய்வு செய்து பள்ளி செல்லும் நேரத்தில் கூடுதல் பேருந்தை இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை
எழந்துள்ளது

What do you think?

ஆர். எஸ். மங்கலம் காவல் நிலையத்தில் பெட்டிஷன் மேளா நிகழ்வு

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் துறைமுகத்தில் இன்று மீன்களின் விலை நிலவரம்