ஒன்றிய பாஜக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
வந்தவாசியில், தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழு சார்பில் தனிநபர் மத சுதந்திரத்திற்கு. எதிரான ஒன்றிய பாஜக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி கோட்டை மூலையில், தமிழ்நாடு சிறு பான்மை மக்கள் நலக் குழு சார்பில் தனிநபர் மத சுதந்திரத்திற்கு. எதிரான ஒன்றிய பாஜக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் கா.யாசர் அராபத் தலைமையில் நடைபெற்றது.மாவட்ட பொருளாளர்கே.நவாப் ஜான் மாவட்ட துணைத்தலைவர், எ.ஷேக் இஸ்மாயில் ஷரிப் முன்னிலை வகித்தனர்.

தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழு மாவட்ட செயலாளர் அ. அப்துல் காதர்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் பா.செல்வன், தொழிற்சங்க தலைவர் எம்.வீரபத்திரன், எஸ்.ராமதாஸ் கண்டன உரையாற்றினர். தனிநபர் மத சுதந்திரத்திற்கு. நாட்டின் மதச் சிறுபான்மைக்கும் எதிரான வந்தே மாதரம் பாடலை கட்டாயப்படுத்தாதே.சிறுபான்மை நிறுவனங்களின் சொத்துக்களை கபளீகரம் செய்ய முனையும் ஒன்றிய பாஜக அரசின் வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்காற்று மசோதா எம் சி ஆர் ஏ-2026 ஐ திரும்பப் பெறு உள்ளிட்ட முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில், விவசாயி கள் சங்க துணைத் தலைவர் ந.இராதாகிருட்டிணன்,மாவட்ட விசிக வழக்கறிஞர் அணி, துணைச்செயலாளர் மூ.வசிகரன் மாதர் சங்க மாவட்ட ஒருங்கிணைப் பாளர் எஸ்.சுகுணா இரா.சேட்டு, டி.எஸ் ஆலம், கே.ஷானவாஸ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


