in

ஓசூர் காசி விஸ்வநாதர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்

ஓசூர் காசி விஸ்வநாதர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்

 

பிரதோஷத்தை முன்னிட்டு ஓசூர் காசி விஸ்வநாதர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்.

நந்தி பெருமானுக்கும் சிவபெருமானுக்கும் பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் – பக்தர்கள் தரிசனம்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் அமைந்துள்ள ஸ்ரீ பிரசன்ன விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் திருக்கோவிலில், பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இதையொட்டி நந்தி பெருமானுக்கும், காசி விஸ்வநாதர் சுவாமிக்கும் பால், தயிர், சந்தனம், கரும்புச்சாறு உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமிக்கும், நந்தி பெருமானுக்கும் பல்வேறு வண்ண மலர்களால் அழகிய புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டது.

பின்னர் சிவபெருமானுக்கும் நந்தி பெருமானுக்கும் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

பிரதோஷ வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நந்தி பெருமானை வழிபட்டு, காசி விஸ்வநாதரை தரிசனம் செய்து அருள் பெற்றனர்.

What do you think?

திருவாவடுதுறை அபிஷேகத் திருநாள் நூல் வெளியீடு விழா