in

கோபச்சந்திரம் ஸ்ரீ வெங்கடரமண சுவாமி கோவிலில் பௌர்ணமி சிறப்பு விளக்கு பூஜை

கோபச்சந்திரம் ஸ்ரீ வெங்கடரமண சுவாமி கோவிலில் பௌர்ணமி சிறப்பு விளக்கு பூஜை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் கோபச்சந்திரம் அருகே அமைந்துள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ வெங்கடரமண சுவாமி திருக்கோவிலில் ஆவணி மாத பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு விளக்கு பூஜை நடைபெற்றது.  

இதையொட்டி கோவில் வளாகத்தில் ஏராளமான பெண்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு விளக்கேற்றி சிறப்பு வழிபாடு செய்தனர். தொடர்ந்து ஸ்ரீ வெங்கடரமண சுவாமியின் 1008 திருநாமங்களை பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பாடி நாம கீர்த்தனை செய்தனர்.

பின்னர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ வெங்கடரமண சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றதை தொடர்ந்து மகா மங்களாரத்தி காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்து, குடும்ப நலன், ஆரோக்கியம், செல்வ வளம் மற்றும் உலக நன்மைக்காக பிரார்த்தனை செய்தனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டி நிர்வாகிகள் செய்திருந்தனர்

What do you think?

ஓசூர் மோரனபள்ளி ஸ்ரீ மகா பிரத்தியங்கிரா தேவி கோவிலில் பௌர்ணமி சிறப்பு பூஜை

குறைந்த தொகைக்கு டெண்டர் கோரியும் பணி வழங்கவில்லை – மயிலாடுதுறை ஆட்சியரகத்தில் ஒப்பந்ததாரர் புகார்