in

அரண்மனைபுதூர் மந்தையப்பன் கோவில் மகா கும்பாபிஷேக விழா

அரண்மனைபுதூர் மந்தையப்பன் கோவில் மகா கும்பாபிஷேக விழா

 

வருசநாடு அருகே நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த அரண்மனைபுதூர் மந்தையப்பன் கோவில் மகா கும்பாபிஷேக விழா.

அரண்மனைபுதூர் உள்ளிட்ட சுற்றுவட்டார மலை கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டு சாமி தரிசனம்.

தேனிமாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா மேற்கு தொடர்ச்சி மலைஅடிவாரத்தில் வருசநாடு அருகே அமைந்துள்ள அண்மனைபுதூர் கிராமத்தில் நூற்றாண்டு பழமைவாய்ந்த மந்தை அம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

இந்நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஆகம விதிப்படி கிராம மக்களின் பங்களிப்புடன் கட்டப்பட்டு வந்த மந்தை அம்மன் கோவில் கும்பாபிஷேகம் இரண்டு நாட்களுக்கு முன்பு கடந்த செவ்வாய்க்கிழமை விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. அதன்பின்பு வாஸ்து சாந்தியும் அதனைத் தொடர்ந்து நான்கு கால யாகசாலை வேள்விகள் நடைபெற்றது.

அதனையடுத்து இன்று காலையில் பசுமாடு மற்றும் கன்றுக்குட்டியை அழைத்து வந்து கோ பூஜை செய்து நான்காம்கால யாகசாலை வேள்வி பூஜை நடைபெற்றது.

அதன் பின்பு சிவாச்சாரியார்கள் மற்றும் 48 நாட்கள் விரதமிருந்த பக்தர்கள் மூலம் நாதஸ்வரம் மேளதாளங்கள் முழங்க கடங்கள் புறப்பாடாகி சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் ஓத 108 புனித திருத்தலங்களில் இருந்து சேகரித்து கொண்டு வரப்பட்ட புனிதநீர் கலசத்தின் மீது தெளிக்கப்பட்டு மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.

அப்போது வானத்தில் மூன்று கருடன்கள் கோவிலை வலம் வந்து ஆசி வழங்கியது பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது.

கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு மூன்று நாட்களும் வருசநாடு அரண்மனைப்புதூர் பகுதி மக்களுக்கு அன்னதானம் நடைபெற்றது.

இவ்விழாவில் வருசநாடு மற்றும் சுற்றுப்பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு மந்தை அம்மனை சாமி தரிசனம் செய்தனர்.

What do you think?

ஆவணி மாதம் பௌர்ணமி சிறப்பு மகாயாகம்

ஓசூர் மோரனபள்ளி ஸ்ரீ மகா பிரத்தியங்கிரா தேவி கோவிலில் பௌர்ணமி சிறப்பு பூஜை