in

தந்தை உங்களின் நம்பிக்கையை நிச்சயம் காப்பாற்றுவார் – மகள் தீவிர வாக்கு சேகரிப்பு


Watch – YouTube Click

தந்தை உங்களின் நம்பிக்கையை நிச்சயம் காப்பாற்றுவார் – மகள் தீவிர வாக்கு சேகரிப்பு

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைய இரண்டு தினங்களே உள்ள நிலையில் தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் அனைத்து கட்சியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் பாஜக வேட்பாளரும், தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிறுவனுருமான ஜான்பாண்டியன் பல்வேறு இடங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

அவருக்கு உறுதுணையாக கிராமம் வாரியாக சென்று அவரது மகள் வினோலின் நிவேதா தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.

அந்த வகையில் இன்று காலை முதலே வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் கிராமம் வாரியாக துண்டு பிரசுரங்கள் வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

மேளதாளங்கள் முழங்க பட்டாசு வெடித்து அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் பொதுமக்களிடம் பேசுகையில் கண்டிப்பாக தனது தந்தை வெற்றி பெறும் பட்சத்தில் உங்களுக்கான கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்ற உத்தரவாதத்தை தான் தருவதாக கூறி பொது மக்களிடம் தனது தந்தைக்காக ஆதரவை திரட்டினார்.

வாக்கு சேகரிப்பின் போது பாரதிய ஜனதா கூட்டணி கட்சி சார்பில் அனைவரும் பங்கேற்றனர்.


Watch – YouTube Click

What do you think?

சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கரின் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

அதிமுக நிர்வாகிகள் வீதி, வீதியாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு